உதயநிதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக... காரணம் என்ன?!!

உதயநிதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட திமுக... காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

திருவாரூர் அருகே குன்னியூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டம் திருக்குவளையில் நடைபெற உள்ள சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் வந்தார்.   திருக்குவளையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொள்வதற்காக திருவாரூரிலிருந்து திருக்குவளைக்கு காரில் பயணம் மேற்கொண்டார்.

அப்பொழுது திருவாரூர் அருகே குன்னியூர் என்ற பகுதியில் அப்பகுதி திமுகவினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பதற்காக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.   இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்காத உதயநிதி காரை நிறுத்தாமல் திருக்குவளைக்கு பயணம் மேற்கொண்டார்.  இதனால் கோபமடைந்த திமுகவினர் அவருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
சொந்தக் கட்சியினரே உதியநிதி ஸ்டாலினுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com