அருப்புக் கோட்டையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் ராஜு என்பவர் எக்ஸ்ரே பிரிவில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார்.இவரை அதே மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
டெக்னீஷியன் ராஜு என்பவரின் எக்ஸ்ரே அறையை சுத்தம் செய்ய சென்ற, உமா மகேஸ்வரி என்ற தூய்மை பணியாளருக்கும் ராஜூவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜு, உமா மகேஸ்வரியை நன்கு முறை செருப்பால் அடித்துள்ளார், வலிதாங்கமுடியாமல் அழுது கொண்டே வெளியில் வந்த உமா மகேஸ்வரி தன்னுடன் பணியாற்றும் சக தூய்மை பணியாளர்களிடம் இதை பற்றி தகவல் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணியாளர்கள் டெக்னீஷியன் ராஜுவை சரமாரியாக தாக்கியுள்ளனர், மருத்துவ ஊழியர்கள் ராஜூவை காப்பாற்றி அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை காவல் துறையினர், மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்