
நடிகர் அஜித்-தின் குட் பேட் அக்லி படத்தில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, பட தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில், “நாட்டுப்புற பாட்டு” படத்தில் இடம்பெற்றிருந்த ஒத்த ரூபாய் தாரேன், “சகலகலா வல்லவன்” படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ, “விக்ரம்” படத்தில் இடம்பெற்ற என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தன்னிடம் உரிய அனுமதி பெறாமல்,குட் பேட் அக்லி திரைப்படத்தில் இந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில், குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியுள்ளது பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்பதால், 7 நாட்களில் இந்த பாடல்களை நீக்க வேண்டும் எனவும், அனுமதின்றி பயன்படுத்தியுள்ளதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்