
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின் போது அவர்களுக்கு என இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் சிலர் குடும்ப அட்டை, வாக்காளர் உரிமம், அடையாள அட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே, பக்கத்து ஊரை சேர்ந்த இளைஞர்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கின்றனர். சில மாதங்களாகவே இவர்களின் அராஜகம் அதிகமாகி வந்துள்ளது.
மது அருந்திவிட்டு அங்கிருக்கும் பெண்களை அவதூறாக பேசுவது அவர்களிடம் அத்துமீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு படி அதிகமாக “டேய் மச்சான் அவளை தூக்கணும்டா” என்று கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டுவந்துள்ளனர். இதை எதிர்த்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் கேள்வி கேட்டுள்ளனர்.
இதனால் அந்த இளைஞர்களுக்கு சப்போர்ட் செய்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நரிக்குறவர் பெண்களை தாக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை குறித்து நரிக்குறவர் சமுதாய பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்