பக்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்!

பக்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்!
Published on
Updated on
1 min read

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு கோவில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  

கோவிலில் ஆய்வு

ராமநாத ஸ்வாமி திருக்கோவிலில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலில் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பக்தர்களிடம் கலந்துரையாடினார்.  

பக்தர்கள் தங்க மண்டபம்

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் கட்டி முடிக்கப்படாத திட்டப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். கோவிலைச் சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு மண்டபங்கள் கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக கோவிலுக்கு உள்ளே அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com