“அவர்களின் கொள்கையே கொள்ளை தானே?” - விமர்சிக்க தொடங்குவதற்கு முன்பே கதறினாள் எப்படி.. திமுகவை விளாசிய விஜய்!

அதனால் தான் மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை கையில் எடுத்தோம்..
“அவர்களின்  கொள்கையே கொள்ளை தானே?” - விமர்சிக்க தொடங்குவதற்கு முன்பே கதறினாள் எப்படி.. திமுகவை விளாசிய விஜய்!
Published on
Updated on
1 min read

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக இன்று காஞ்சிபுரத்தில் உள்ளரங்க கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்தித்து உரையாற்றியுள்ளார். அதில் “அண்ணா தொடங்கிய கட்சியை கைப்பற்றிய சிலர் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நம்மை பொய் சொல்லி நம்ப வைத்து ஓட்டு போட வைத்து நல்லது செய்வது போல நாடகமாடி கொண்டிருக்கும் அவர்களை கேள்வி கேட்க வேண்டும்.

முதல் களப்பணியை தொடங்கியது இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் ஒரு பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பிற்கு வந்திருப்பது இந்த காஞ்சிபுரம் மண்ணில் தான்.இந்த மக்களுக்கு எல்லா நல்லதையும் செய்ய வேண்டும். சட்டபூர்வமாக எல்லாருக்கும் செய்ய வேண்டும், அதனால் தான் மக்களிடம் செல் என கூறிய அண்ணாவை கையில் எடுத்தோம். இன்று அண்ணாவை மறந்திருப்பது யார்? கொள்கையா விலை என்ன என கேட்கும் கட்சியை நடத்திக்கொண்டு அந்த தலைவர் நம்மை பார்த்து கேள்வி கேட்கிறார்.

நமக்கு கொள்கை இல்லையா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கட்சியின் முதன்மையாக கொண்டுள்ள நமக்கு கொள்கை இல்லையா, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று சமத்துவதுடன் பேசி சாதி வாரியாக கணக்கெடுப்பு கேட்ட நமக்கு கொள்கை இல்லையா, வக்பு சட்டத்தை எதிர்த்து முதலில் நீதிமன்றத்திற்கு சென்று நமக்கு கொள்கை இல்லையா? நீட்டுக்கு தற்காலிக தீர்வு சொன்ன நமக்கு கொள்கை இல்லையா, கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என சொன்ன நமக்கு கொள்கை இல்லையா?

கொள்கையை வெறும் பேச்சில் பேசிக்கொண்டிருக்கும், கொள்கையை அண்டர்கிரவுண்டில் அடகு வைத்துவிட்ட இவர்களுக்கு கொள்கையே கொள்ளை தான். எங்கள் கட்சி சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? இப்போது உங்கள் கட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நாங்கள் விமர்சிக்கவே தொடங்கவில்லை அதற்குள் கதறினாள் எப்படி? உங்கள் அரசவை புலவர் யாராவது இருந்தால் அவர்கள் கண்ணை துடைத்துவிடுங்கள்” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com