
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளம்துறை பகுதியில் உள்ள பழைய வீட்டில் பதுங்கி இருந்த நாகப்பாம்புக்கள்.
வீட்டை இடித்து அகற்ற முயன்ற போது பீரோக்கு அடியில் 24 நல்ல பாம்பு குட்டிகள், ஏழு பாம்பு முட்டைகள் மற்றும் பெரிய நீளம் உள்ள நாகபாம்பு இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளர் மற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பாம்பு பிடி வீரர்களை அழைத்து பாம்புகள் பிடிக்கப்பட்டன. அந்த பாம்புகள் அனைத்தும் வன துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த பாம்பு குவியலை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளம் துறை லூர்து காலனியை சேர்ந்தவர் ரீகன் (30). தனது பழைய வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார்,இதற்காக ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாத பழைய வீட்டை இடிக்க ரீகன் முடிவு செய்தார். இதையடுத்து அங்குள்ள பொருட்களை அகற்றும் பணி நேற்று நடந்தது.
அப்போது ஒரு அறையில் இருந்த பீரோவை தூக்க முயன்ற போது அதன் அடியில் இருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு படம் எடுத்தபடி சீறிக் கொண்டு வெளியே வந்தது. இதனால் தொழிலாளர்கள் அதை விரட்டினர்.
பின்னர் பீரோவை தூக்கிய போது, அதன் அடியில் ஒரு பொந்தில் ஏராளமான பாம்பு குட்டிகள் குவியல், குவியலாக நெளிந்து கொண்டிருந்தன. பாம்பு குட்டி குவியலுக்கு இடையே பாம்பு முட்டைகளும் கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அவர்கள் உடனடியாக அருகே உள்ள பாம்பு பிடி வீரர்களை அழைத்து லாபகமாக அந்த 24 பாம்பு குட்டிகள் மற்றும் ஏழு பாம்பு முட்டைகளை அங்கு இருந்து அகற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்னர் வனத்துறையினர் அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்