“மனிதரை போல அழைத்து கற்களை வீசும் பேய்” - சிசிடிவியில் பதிவான அமானுஷ்ய உருவம்… அச்சத்தில் வாழும் கிருஷ்ணகிரி மக்கள்!

அழுவது போன்ற சத்தமும் மனிதர்கள் ஆபத்தில் இருந்தால் அலறுவது போன்ற சத்தங்களும் தொடர்ந்து கேட்டு வந்துள்ளது...
“மனிதரை போல அழைத்து கற்களை வீசும் பேய்” - சிசிடிவியில் பதிவான  அமானுஷ்ய உருவம்… அச்சத்தில் வாழும் கிருஷ்ணகிரி மக்கள்!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், துரைசாமி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது வீட்டிற்கு அருகிலேயே அரசு திட்டத்தின் கீழ் இவர் கழிப்பறை கட்டி அதனை பயன்படுத்துவருகிறார். இந்நிலையில் அந்த கழிப்பறையில் இருந்து பெண்ணின் உருவம் ஒன்று காற்றில் மிதந்து எதிர்திசையில் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள் சில நாட்களாகவே இது போன்ற அமானுஷ்யங்கள் இப்பகுதியில் நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் வீடுகளின் கூரை மீது கற்களை எறிவது மணலை தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. தொடக்கத்தில் குழந்தைகள் அல்லது எதிரிகள் யாரவது செய்வார்கள் என அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர். பின்னனர் இரவு நேரங்களில் குழந்தைகள் அழுவது போன்ற சத்தமும் மனிதர்கள் ஆபத்தில் இருந்தால் அலறுவது போன்ற சத்தங்களும் தொடர்ந்து கேட்டு வந்துள்ளது. எனவே என்ன நடக்கிறது என கண்காணிக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கேமரா வைத்தது கண்காணித்து வந்திருக்கின்றனர்.

Admin

கடந்த (நவ 21) ஆம் தேதி அமாவாசை தினத்தன்று இரவு 8 மணியளவில் அப்பகுதியில் உள்ள சிலர் தெருவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் மனுஷமான உருவம் ஒன்று தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்று இரவு வழக்கத்திற்கு அதிகமான அழுகுரல் சத்தமும் அலறல் சத்தமும் கேட்டது என தெரிவிக்கின்றனர். மேலும் அன்று இரவு வீடுகள் மீது கற்களையும் மணலையும் யாரோ வாரி காட்டியதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அந்த கேமரா காட்சிகளை பரிசோதித்த போது அமானுஷ்ய உருவம் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அப்பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லை என்றும் முன்போல இல்லை இப்போது வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் வெளியில் விளையாட கூட அச்சப்படுகின்றனர் எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com