“ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை” - பள்ளிக்கு சென்று வரும் போது பின் தொடர்ந்த இளைஞர்.. காதலி வீட்டில் தற்கொலை முயற்சி!

பெற்றோர்கள் மாணவியை தாங்களே பள்ளிக்கு அழைத்து வருவது மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வது என பாதுகாப்பாக மாணவியை
“ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை” - பள்ளிக்கு சென்று வரும் போது பின் தொடர்ந்த இளைஞர்.. காதலி வீட்டில் தற்கொலை முயற்சி!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான செல்வம். இவர் பழைய பல்லாவரம் பகுதியில் வீடு எடுத்து பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் மீது செல்வத்திற்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவியை தினந்தோறும் பின் தொடர்ந்து தனது காதலை கூறியுள்ளார். செல்வத்தின் காதலுக்கு மறுப்பு தெரிவித்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

மாணவி செல்வத்தின் காதலுக்கு மறுப்பு தெரிவித்த பிறகும் செல்வம் மாணவியை விடாது பின் தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். மாணவி எந்த பிரச்சனையும் வரக்கூடாது என நினைத்து செல்வத்திடம் பலமுறை எடுத்து கூறியுள்ளார். அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் செல்வம் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் மாணவி செல்வம் குறித்து வீட்டில் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

Admin

இதனால் மாணவியின் பெற்றோர்கள் மாணவியை தாங்களே பள்ளிக்கு அழைத்து வருவது மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வது என பாதுகாப்பாக மாணவியை பார்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே செல்வத்தினால் மாணவியை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னை மாணவி காதலிக்கவில்லை என்று கோபத்தில் இருந்த செல்வம் மாணவியை பார்க்க முடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்துள்ளர். இதனை தொடர்ந்து செல்வம் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று மாணவியின் தாயிடம் “நான் உங்க மகளை காதலிக்கிறேன் எனக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுங்க” என கேட்டுள்ளார்.

செல்வம் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மறுத்து கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் மாணவியின் வீட்டுக்கு வந்த நிலையில் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கையில் தாக்கிவிட்டு தனக்கு தானே கழுத்தறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Admin

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கழுத்தறுத்து கொண்டு கீழே சரிந்த செல்வத்தையும், காயப்பட்ட மாணவியையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்வம் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com