“மகனின் நிலையை பார்த்து பதறிய தந்தை” - நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்த சக மாணவர்கள்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய வீடியோ!

“மகனின் நிலையை பார்த்து பதறிய தந்தை” - நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்த சக மாணவர்கள்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய வீடியோ!

செக்காணூரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
Published on

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்காணூரணி பகுதியில் இயங்கி வரும் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி மதுரை மற்றும் தேனி அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும்  மாணவர்கள் தங்குவதற்கான அரசு தங்கும் விடுதியான கள்ளர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி விடுதியில் தங்கி இருந்த மாணவனை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் மாணவனை தாக்கிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Admin

இதனை தாக்கப்பட்ட மாணவர் மற்ற மாணவர்களுக்கு பயந்து வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் மகன் தாக்கப்பட்ட வீடியோவை பார்த்த அவரது தந்தை இந்த சம்பவம் குறித்து வீடியோ ஆதாரத்துடன் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று மாணவர்கள் விசாரணைக்குஅழைத்து வந்த  செக்காணூரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் நடைபெறும் போது  கவனிக்காமல் கவனக்குறைவாக இருந்ததாக விடுதி காப்பாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com