

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. கடந்த (அக் 24) தேதி உறவான குறைந்த காற்றழுத்த தாழ்வு தீவிர காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு “மோந்தா” புயல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் மணிக்கு 13 கி மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த புயல் சென்னைக்கு 640 கி மீ தூரத்தில் மையல் பெற்றுள்ளதாகவும் புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
எனவே இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டக்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளையும் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மாநி வரை இந்த 7 மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளனர்.
புயல் தொடங்கிய நள்ளிரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று தொடங்கி நாளை வரையில் மணிக்கு 80 கி மீ முதல் 100 கிமீ வரை சூறாவளி காற்றும் வீசும் எனவும், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று தொடங்கி புதன்கிழமை வரை மணிக்கு 80 கி மீ முதல் 110 கி மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் இடம் மாற கூடும் என தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு உருவான “நிவர்” புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்தபோது விழுப்புரம் மற்றும் கடலூர் பகுதியில் 6 மணி நேரத்தில் 33 செ மீ மழையை கொட்டி தீர்த்தது போல இந்த புயலும் கரையை கடக்கும் குறைந்த நேரத்தில் அதிக மழையை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என தெரிவித்துள்ளனர். புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை நெருங்கி வரும் நிலையில் அந்த மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என சொல்லப்படும் நிலையில் சரியான தகவலை புயல் வட மாவட்டங்களை நோக்கி நகரத்து வரும் போதே கணிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.