

சென்னை மாவட்டம், முகப்பேர் அடுத்த திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் 24 வயதுடைய ரோஷன் நாராயணன். இவர் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ரோஷனின் அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் ஆனதாக சொல்லப்படும் நிலையில் பெற்றோர்களுடன் அனைவரும் குடும்பமாக திருப்பதி செல்லலாம் என முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ரோஷனுக்கு பணியிடத்தில் விடுமுறை கிடைக்காததால் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மட்டும் திருப்பதிக்கு சென்றனர்.
அனைவரும் ஊருக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த ரோஷன் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் திருப்பதி சென்ற குடுபத்தினர் இன்று அதிகாலையில் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவை தட்டிப் பார்த்திருக்கின்றனர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்த போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் துகில் தொங்கிய ரோஷனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் போன் செய்திருக்கின்றனர். அப்போது ஆம்புலன்சில் வந்த செவிலியர் பரிசோதனை செய்து ரோஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே தற்கொலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் போலீசார் ரோஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசார் ரோஷன் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், "என் காதுக்குள்ள யாரோ பேசுற மாதிரி கேக்குது என்னால முடியல அண்ணா உன் கூட சண்டை போட்டதுக்கு சாரி, அம்மா அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க” என்று எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்