சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 13) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நுங்கம்பாக்கம் காலேஜ் ரோடு, ஹைரோடு, மூர்ஸ் சாலை, KNK சாலை, வாலஸ் கார்டன், ரட்லேண்ட் கேட் (1 முதல் 6-வது தெரு வரை), சுப்பாராவ் அவென்யூ (1 முதல் 3-வது தெரு வரை), ஆண்டர்சன் ரோடு, ஹாடோஸ் ரோடு (1 மற்றும் 2-வது தெரு), நவாப் ஹபிபுல்லா அவென்யூ (1 மற்றும் 2-வது அவென்யூ), பைக்ராப்ட் கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து பல்லாவரம் பழைய சந்தை, பம்மல் சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ், ஜி.இ. நிறுவனம், ராணுவ குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் விமான உணவு தயாரிப்பு மையம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், எல்&டி, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. மேலும் அத்தியாவசிய தேவைகளை முறையாக திட்டமிட்டு கொள்ளுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.