

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சசிகலா. அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநரான பாண்டி என்பவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்த நிலையில் மகளின் காதலை அறிந்த தந்தை கண்ணன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எனவே பாண்டியின் வீட்டார் சசிகலாவை பெண் கேட்ட போது தர மறுத்து சசிகலாவின் தந்தை அவர்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் சசிகலாவை வற்புறுத்தி பாண்டியின் உறவினரான முருகன் என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு திருமணம் செய்து வாய்த்த நிலையில் தற்போது முருகன்,சசிகலா தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார். இருப்பினும் சசிகலா தனது காதலை கை விடாமல் தொடர்ந்து பாண்டியுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசி வந்த நிலையில் கடந்த மாதம் சசிகலாவின் கணவர் முருகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றிருக்கிறார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சசிகலா பாண்டியுடன் சேர்ந்து தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சசிகலாவின் தந்தை கண்ணன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அள்ளித்தா புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியிடம் இருந்த சசிகலாவை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தை கண்ணனுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கணவர் முருகன் வீட்டிற்கு செல்லாத சசிகலா தந்தை கண்ணனுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சசிகலா தன்னுடைய தந்தையின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் இறந்த சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் காதலி சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்த ஓட்டுனரான பாண்டியும் கிருஷ்ணகிரி பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணத்திற்கு பிறகு காதலை கைவிடாத காதலர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சசிகலாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காதலன் பாண்டியன் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையிலும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தற்கொலை அல்லது கொலை என்ற நோக்கத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.