

சென்னை மாவட்டம், கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவுடி ஆதி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குறிப்பாக ஒரு கொலை வழக்கில் முக்கிய நபராக இருந்து போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கும் பொன்னகரம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான சாருமதி என்பவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு இவர்கள் பழகி வரும் நிலையில் ஆதி ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்த பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் சாருமதியின் தோழியான சுசித்ரா என்பவர் பிரசவத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்தவுடன் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு காரணம் முறையான மருத்துவம் வழக்கப்படாததே என சுசித்ரா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போது சுசித்ராவிற்கு உதவியாக இருக்க சாருமதி மருத்துவமனைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சாருமதி தனது கள்ளகாதலனான ஆதியை நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு வரவழைத்து இருவரும் குடித்துவிட்டு மருத்துவமனையில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மருத்துவமனை அலுவலக வளாகம் அருகே மறைந்திருந்த மூன்று மர்ம நபர்கள், ஆதியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ரவுடி ஆதி, ரத்த வெள்ளத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்குள் ஓடி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏற்கனவே நிலுவையில் உள்ள கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் பழிவாங்க கொலை செய்தார்களா? அல்லது கள்ளத்தொடர்பின் தனிப்பட்ட பிரச்சனையில் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.