ரூ.3.75 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு...

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.3.75 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு...
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக மினி கூட்டரங்கில் வைத்து இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணை தலைவர் உதய கிருஷ்ணன், செயலர் ருக்மணி, உதவி செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்று கூட்டத்தில் இடம் பெற்ற ஆறு தீர்மானங்கள் விவாதங்களுக்கு பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் பணிகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, மயானத்தில் தண்ணீர் தொட்டி, வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக ரூ.3.75 கோடி நிதியில் பணிகளை மேற்கொள்வதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் இடம் பெற்ற ஆறு தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி தந்த உறுப்பினர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com