கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை | சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்,
பேரிடர் கால பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடர் படியினை வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில தலைமையின் அறிவுறுத்தல் படி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ஆட்டோவை மீட்க சென்றவர் குழந்தைகளை கடத்திய மர்ம கும்பல்...