

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், இவர் அதே பகுதியில் டிராக்டர் டிப்பர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் புதுப்பாலப்பட்டு பகுதியிலிருந்து, டிராக்டர் டிப்பர் வாகனத்தில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு, சங்கராபுரம் நோக்கி சென்ற போது ஓட்டுநர் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் விளையாட்டு தனமாக திடீரென, டிராக்டரில் உள்ள ஹைட்ராலிக் கருவியை அழுத்திய போது, டிப்பர் மேல்வாட்டத்தில் தூக்கியது.
இதனால் டிப்பரில், செங்கற்களின் மேல் அமர்ந்திருந்த கூலித் தொழிலாளர்கள் செங்கற்களுடன் சரிந்து கீழே விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதால் ஓட்டுநர் அன்பழகன் பதற்றத்தில், திடீரென பின்புறம் திரும்பி பார்த்துள்ளார்.
எனவே டிராக்டர் நிலைத்தடுமாறி, மின்சார கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, உடன் அமர்ந்திருந்த சிறுவனை கட்டிப்பிடித்து,வயல்வெளி பகுதியில் விழுந்து, நூலிழையில் உயிர் தப்பி உள்ளார்.
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஓட்டுநரையும், சிறுவனையும் மற்றும் கூலி தொழிலாளர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் செய்த விளையாட்டு செயல் பெரும் விபத்தில் முடிந்தது நூலிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்