கோட்டையிருப்பு ஊராட்சிக்கு உட்பட்டது தேரேந்தல்பட்டி கிராமம். இங்கு எந்த வித அடிப்படை வசதியுமில்லாமின்றி காணப்படுவதால் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்த நிலையில் தற்போது 20 குடியிருப்புகள் மட்டுமே உள்ளன.
21 நூற்றாண்டில் வேறு கிரங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மனிதன் குடியேற திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் இந்தியாவில் அதுவும் விடியல் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் ஒரு கிராமம் மக்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத நிலையை எட்டி உள்ளது வியப்படையை வைத்துள்ளது.
இது வரை தெரு விளக்குகள் இல்லை,பேருந்து வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ரேசன் கடை இல்லை, அங்கன்வாடி இல்லை, பள்ளிக்கூடம் இல்லை, குண்டும் குழியுமான சாலை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, மற்ற கிராமங்களை போன்று குளியல் தொட்டி இல்லை என அடுக்கு அடுக்காக இல்லாமையை கூறும் கிராம மக்கள் தாங்கள் இந்தியன் என்று தெரிவது தேர்தலில் மட்டுமே என உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
பல வேதனைகளை தாண்டி 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதை விட இடம்பெயர்வதே நல்லது என 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வீடுகளை காலி செய்துவிட்ட நிலையில் தற்போது 20 குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்ட சிண்டெக்ஸ் தொட்டி சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகமில்லாமல் .கற்களும் குப்பைகளும் நிறைந்து காணப்படுவதால் ஒரு குடம் தண்ணீரை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏதேனும் அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்களை அழைத்தால் குண்டும் குழியுமான சாலைகளில் வர மறுக்கும் ஓட்டுனர்கள் நீங்கள் மெயின் ரோட்டுக்கு வாருங்கள், அங்கு வந்து ஏறிக் கொள்ளுங்கள் என கூறி வர மறுப்பதாக மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்திலிருந்து அங்கன்வாடிக்கு சுமார் 2 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளை நேரடியாக ஒன்றாம் வகுப்பிற்கு அனுப்பி வைப்பதாகவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் காட்டு வழியாக செல்வதால் பள்ளிக்கு சென்றார்களா இல்லையா என்பதுகூட, வீடு திரும்பினால்தான் தெரியும் என்று அச்சத்துடன் பெற்றோர் கூறுகின்றனர்.
சுமார் 30 ஏக்கர் விவசாய செய்யக்கூடிய. தேரேந்தல்பட்டி கண்மாயை தூர்வார கூட அதிகாரிகள் முன் வராததால் விவசாயம் கூட செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக வறுமையில் வாடுவதாக கிராம விவசாயிகள். தெரிவிக்கின்றனர்.
இப்படி பல்வேறு குறைகள் குறித்து அரசை அணுகினாலும் எங்களுக்கு எந்தவித உரிமைகளும், அடிப்படை தேவைகளும் கிடைக்கவில்லை என்பதால். நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணித்ததோடு ஆகஸ்ட் 15ல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூடகொள்ளாமல் விதியே என இருந்து விட்டதாக வேதனை தெரிவிக்கும் அக் கிராம பெண்கள்.
அடிப்படை தேவைகளை செய்து தாருங்கள் என பஞ்சாயத்து கிளர்க்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்துள்ளதோடு போதாகுறைக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் மனு வழங்கிய நிலையில்.இதுவரை ஒருமுறை கூட எங்கள் ஊரை அலுவலர்களோ, அதிகாரிகளோ யாரும் வந்து இதுவரை பார்க்கவில்லை என கவலை தெரிவித்தனர்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்களை குறித்து நினைவுக்கும் வரும் அரசியல் வாதிகள் தேர்தலுக்கு பிறகு இப்படி ஒரு கிராம இருப்பதையே மறந்து விடுவதாகவும், கவுன்சிலரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வரை வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்லி கூட எங்கள் ஊருக்கு வந்தது கிடையாது என அப்பாவித்தனமாக கிராம மக்கள் பேசினர்.
காட்டுவாசிகள் போல் வாழ்ந்து வருவதாகவும் குறைகளை சொல்லவும் பயமாக உள்ளதென தெரிவித்த கிராம மக்கள், தங்களுக்கு மயான வசதி இல்லை என்பதோடு , மழைக்காலங்களில் இறந்தவர்களை மிகவும் சிரமத்தோடு. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் அடக்கம் செய்து வருவதாக குமுறுகின்றனர்.
சீமை கருவேலம் காட்டுக்குள் வசிக்கும் உங்கள் ஊரில் எப்படி பெண் கொடுப்பது, பெண் எடுப்பது என்று பலரும் சம்பந்தம் செய்ய வருவதில்லை என்று கூறும் இக்கிராமத்தினர், இனியும் இந்த நிலை ஏற்பட்டால் இருக்கும் 20 குடும்பங்களும் தாய் மண்ணை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தேரேந்தல்பட்டி மக்கள் வெறுப்பு மற்றும் வேதனையுடன் செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்திய குடியுரிமை பெற்ற இந்த குடிமக்கள் அரசின் பார்வையில் இருந்து தனித்து விடப்பட்ட நிலையில் இவர்களுக்கும் உதவிட, அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக திருப்பத்தூர் செய்தியாளர் வெ.கலைவாணனுடன் நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.