“விரிவாக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை” - திருநள்ளாறு எம்.எல்.ஏ GNS ராஜசேகரன் பதவியேற்பு.. முதலமைச்சர் தலைமையில் ஆளுநர் பதவி பிரமாணம்!

மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு உணவளித்தல் போன்ற பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது...
“விரிவாக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை” - திருநள்ளாறு எம்.எல்.ஏ GNS ராஜசேகரன் பதவியேற்பு.. முதலமைச்சர் தலைமையில் ஆளுநர் பதவி பிரமாணம்!
Admin
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து என். ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. லோக் நிவாஸில் தொடங்கிய நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்த விரிவாக்கத்தில் பாஜகவைச் சேர்ந்த GNS ராஜசேகரன் அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சிவக்கொழுந்து மற்றும் ராஜவேலு ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றிருக்கின்றனர். இவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் இன்று லோக் நிவாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதியேற்றுள்ள திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த GNS ராஜசேகரன், மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது.

மேலும் அவர் தனது தொகுதி மட்டுமல்லாது சுற்றவற்ற பகுதி மக்களுக்கும் நம்மை செய்து வந்த நிலையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கல், கால்வாய்கள் தூர்வாருதல், மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு உணவளித்தல் போன்ற பல்வேறு சமூக பணிகள் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர் மற்றும் நியமன எம்எல்ஏவாக பொறுப்பேற்றுள்ள GNS ராஜசேகரனுக்கு பாஜக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவரது நியமனம் மற்றும் அமைச்சர் பொறுப்பேற்பு புதுச்சேரி அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com