"மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்.. திருநள்ளாறில் வெற்றி உறுதி!" - GNS ராஜசேகரனை ஆதரித்து அண்ணாமலை ரோட் ஷோ

என்.டி.ஏ கூட்டணி அமைந்தால் மகளிர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்
GNS rajasekaran
Published on
Updated on
2 min read

புதுச்சேரி மாநிலத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9 தேதி நடக்கவுள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் GNS ராஜசேகரன் போட்டியிட உள்ளார். மக்களின் சேவகராகவும், சிறந்த அரசியல் பண்பாளராகவும் திகழும் இவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, மக்களை சந்தித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட ராஜசேகரன், சற்றும் மனம் தளராமல் கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி மக்களுடன் களத்தில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதையடுத்து பாஜக இவரை புதுச்சோி நியமன சட்டமன்ற உறுப்பினராக நியமித்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில்  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது  GNS ராஜசேகரனை ஆதரித்து தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று காரைக்கால் அம்பகரத்தூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு GNS க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பேசிய அவர் பாஜக வேட்பாளர் GNS ராஜசேகரனுக்கு “மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது, அதனால்  ஏப்ரல் 9ம் தேதி திருநள்ளாறில் தாமரை மலரும்” என குறிப்பிட்டார். மேலும் “அண்ணன் ராஜசேகரன்  அவர்களுக்கு தாமரை சின்னத்தில் ஒரு வெற்றியை கொடுத்து, திருநள்ளாறு தொகுதியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் பொறுப்பை வழங்க வேண்டும்” என மக்களிடம் கேட்டுக் கொண்டார். “திருநள்ளாறு கோவில் நகரமாக இருக்கிறது, அதைப் பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றும்  மேலும் "தனது டிரஸ்ட் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து "கடந்த முறை மக்கள் அவருக்கு ஆதரவு அளித்திருந்தார்கள், ஆனாலும் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியமால் போனது, இம்முறை தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற  வைக்குமாறு'' கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை திருநள்ளாறு தொகுதியின் வளர்ச்சியை மக்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் எனவும் அதற்கு GNS ராஜசேகரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். “மேலும் மக்கள் அவருக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என தெரிவதாக” நம்பிக்கை தெரிவித்தார். அதையடுத்து பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் என்.டி.ஏ கூட்டணி அமைந்தால் மகளிர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் மத்தியில் மாநிலத்தில் ஒரே ஆட்சி அமைந்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நல திட்டங்கள் சிறப்பாக கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு அதற்கான வாக்குறுதிகளை கொடுத்தார். பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்  GNS ராஜசேகரனை திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு தனது உரையை முடித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com