“தனியார் விடுதியில் வீசிய துர்நாற்றம்” - வாயில் ரத்தம் வெளியேறி இறந்து கிடந்த வாலிபர்.. கடிதத்தில் இருந்த அந்த வார்த்தை!

விஜயன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்ததாக சொல்லி ஆதார் கார்டு முகவரி கொடுத்து...
“தனியார் விடுதியில் வீசிய துர்நாற்றம்” - வாயில் ரத்தம் வெளியேறி இறந்து கிடந்த வாலிபர்.. கடிதத்தில் இருந்த அந்த வார்த்தை!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் புதிய சொகுசு தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் சென்னை திருவல்லிக்கேணி, அனுமந்த பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் விஜயன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்ததாக சொல்லி ஆதார் கார்டு முகவரி கொடுத்து தங்கி இருந்தார். வெள்ளிக்கிழமை ரூம் எடுத்த விஜயன் சனிக்கிழமை இரவு வரை வெளியில் வராததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே அறைக்கு அருகில் சென்று பார்த்த போது அறையிலிருந்து அதிக துர்நாற்றம் வீசியுள்ளது. இதன் காரணமாக விடுதியின் பணியாளர்களை வைத்து அறையை திறந்து பார்த்தபோது அங்கு விஜயன் வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதியின் உரிமையாளர்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Admin

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விஜயன் அதிக அளவு தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார், என்றும் அவரை உயிரிழந்து 15 மணி நேரத்திற்கு மேலாகிறது எனவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த ஆதார் அட்டையில் இருந்த எண்ணிற்கு போன் செய்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். விஜயன் தங்கியிருந்த அறையை பரிசோதனை செய்ததில் அவர் இறப்பதற்கு முன் கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் “கடன் தொல்லை தாங்க முடியவில்லை எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார்

மேலும் விஜயன் இரண்டு தினங்களாக காணவில்லை என்று அவரது மனைவி சாந்தி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த நிலையில் கணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருத்தணி போலீசார் விஜயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com