திருவொற்றியூர் கிராமத்து தெருவை சார்ந்த 20 வயது பெண் ஒருவர் விடுமுறை என்பதால் விளையாட்டு பயிற்சி எடுக்க அருகில் இருந்த அகாடெமிக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் போதையில் இருந்த ஆசாமி ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்த இளம் பெண் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை காப்பாற்றி போதை ஆசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கூட்டத்தில் ஒருவர் “ ஒவ்வொரு புள்ளைகளுக்கும் நாங்கள் தைரியம் சொல்லி அகாடமிக்கு வர வெச்சா ஏன்டா இப்படி பண்றீங்க பொண்ணுங்க வெளியவே வரக்கூடாதா” என கேட்டு அடித்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கால் செய்து வரவழைத்து அந்த ஆசாமியை போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த இளம் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் வழக்கு தொடர முன்வராததால் அந்த ஆசாமி மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.
மேலும் அந்த போதை ஆசாமி திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொது மக்களிடம் அந்த ஆசாமி வாங்கிய அடி இதுபோல் வேறு எந்த பேரிடமும் நடந்து கொள்ள கூடாது, என்ற எண்ணத்தை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்