

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் 24 வயதுடைய மாரிமுத்து இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மாரித்துவிற்கும் அவரது உறவுக்கார பெண்ணான சுவேதாவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு உறவுக்கார திருமணத்தின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அவரது எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்திருக்கின்றனர். காலப்போக்கில் ஒருவருக்கொருவரை பிடித்துப்போக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து வெளியில் சென்ற போது சுவேதாவின் பெற்றோருக்கு மகளை காதல் குறித்து தெரியவந்துள்ளது. மாரிமுத்து இவர்களது உறவினர் என்ற போதும் சுவேதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். மேலும் “மாரிமுத்துவை காதலித்தால் எங்களை மறந்துவிடு” என மிரட்டிய நிலையில் சுவேதாவும் காதலை கைவிடும் முடிவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை வெகுநேரமாகியும் தனது அறையை விட்டு மாரிமுத்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் அவர் கதவையைத் திறந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது மாரிமுத்து வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜீவமணி, தர்மராஜ், உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவின் தற்கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.