

நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூர் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதுடைய குணா இவர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடன் பிறந்த சகோதரி உள்ள நிலையில் குணாவின் சகோதரிக்கு நாகப்பட்டினத்தில் உள்ள ஒருவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார்.
குணா வேலையில் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம் நாகப்பட்டினத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் குணாவிடம் அவரது சகோதரியின் மூத்த மகளான பிளஸ் டூ படிக்கும் மாணவி தனது மாமா என்ற முறையில் நெருங்கி பழகி வந்திருக்கிறார். ஆனால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குணா தனது சகோதரியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மீது குணா கொடுத்த பாலியல் தொல்லையை தாங்க முடியாத சிறுமி இது தொடர்பாக நாகப்பட்டினம் குழந்தைகள் நல குழுமத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் குழந்தைகள் நல குழுமம் சார்பில் நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து 12 ஆம் மாணவி, அவரது தாய் மற்றும் காவலர் குணாவிடம் மகளிர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குணா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு உறுதியானதால், காவலர் குணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட காவலர் குணாவை சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மகளிர் காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். சகோதரியின் மகளை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாகப்பட்டினம் காவல்துறை மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.