“கவுன்சிலர் காலில் விழுந்த நகராட்சி பணியாளர்” - ஒருமையில் பேசி மிரட்டிய மக்கள் பிரதிநிதிகள்.. கவுன்சிலரை மதிக்காததால் நடந்த கொடுமை!

நகர மன்ற உறுப்பினருமான ரவிச்சந்திரனிடம் கூறியதுடன், முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
“கவுன்சிலர் காலில் விழுந்த நகராட்சி  பணியாளர்” - ஒருமையில் பேசி மிரட்டிய மக்கள் பிரதிநிதிகள்.. கவுன்சிலரை மதிக்காததால் நடந்த கொடுமை!
Admin
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு கடந்த 28-ஆம் வந்த 20 வது வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடைபெற்ற பணிகளுக்கான நிதி சம்பந்தமான விவரத்தை கேட்டுள்ளார். அப்போது அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், ரம்யா ராஜா கேட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா முனியப்பனை ஒருமையில் பேசியதாக கூறப்படும் நிலையில் இதனை அறிந்த நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரும், நகர மன்ற உறுப்பினருமான ரவிச்சந்திரனிடம் கூறியதுடன், முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் இல்லாத நிலையில் அவரது அறைக்கு அழைக்கப்பட்ட முனியப்பனை அங்கிருந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரும், நகர்மன்ற உறுப்பினருமான ரவிச்சந்திரன் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு ஒருமையில் பேசி திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் ரம்யா ராஜாவிடம் முனியப்பனை மன்னிப்பு கேட்க கூறிய போது முனியப்பன் மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார் . இதனை ஏற்காத ரம்யா ராஜா மற்றும் அங்கிருந்தவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது . இதனால் வேறு வழியில்லாத முனியப்பன் தனது குடும்ப சூழல் கருதி, தனது அரசு வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என கதறி அழுதுள்ளார்.

இந்த காட்சிகள் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஏன பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துள்ளது . பல்வேறு கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் இது குறித்து புகார் அளித்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து உண்மையாக வழக்கினை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com