“பிணத்தை எடுக்க கூடாது!” – ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட  குடும்பம்.. செத்தும் தீராத கட்டுப்பாடு? தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்!

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சின்னையன் மற்றும் அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்
kallakurichi
Published on: 
Updated on: 
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மனைவி தனபாக்கியம்.  இவர்களுக்கு செந்தில்குமார், பாலகிருஷ்ணன், செல்வி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் வாழ்ந்து வந்த கிராமத்தில், இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் 30 ஆண்டுகளாக கிராமத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் கிடந்துள்ளது.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றை சரி செய்த சின்னையன் குடும்பம், அதை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தன்னிச்சையாக ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தலாம் என்று பஞ்சாயத்து கூட்டி கேள்வி அதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பஞ்சாயத்தில் 3 லட்சம் அபராதமும், கிராமத்திற்கு 3 செட் இடம் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் ஊர் கட்டுப்பாடு போட்டுள்ளனர்.

அதனை செலுத்த மீறியதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சின்னையன் மற்றும் அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் கிராமத்தில் யாரிடமும் பேசாமல் மன வேதனையில் வாழ்ந்து வந்துள்ளனர் அந்த குடும்பத்தினர்.

இந்த நிலையில், சின்னையன் மனைவி தனபாக்கியம் நேற்று உயிரிழந்துள்ளார். ஆனால், தற்போது வரை அவரது சடலத்தை எடுக்க யாரும் செல்லக்கூடாது, புதைப்பதற்கு இடம் வழங்கப்படாமல் ஊர் கட்டுப்பாடு போட்டுள்ளதால் அந்த குடும்பமே தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது. மேலும், இறந்த தனபாக்கியத்தின் பிணத்தை வீட்டிலேயே வைத்துக்கொண்டு கதறி அழுது வருகின்றனர். இந்த சம்பவம் கல்வராயன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.