NMAT 2025: MBA-க்கான நுழைவுத் தேர்வு - தேர்வு எப்போது? எப்படி அப்ளை செய்வது?

இது மாணவர்களுக்கு வசதியான ஒரு தேர்வு முறை. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு தேதி, நேரம், மற்றும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம், மேலும் ஒரு தேர்வு காலத்தில் மூணு முறை வரை இதை எழுதலாம்
NMAT 2025: MBA-க்கான நுழைவுத் தேர்வு - தேர்வு எப்போது? எப்படி அப்ளை செய்வது?
Published on
Updated on
3 min read

MBA படிப்பு, இன்றைய உலகில் மிக முக்கியமான, கனவு தொழில் பாதைகளில் ஒன்னு. இந்தியாவில், NMAT by GMAC தேர்வு, மாணவர்களையும் தொழில்முறை பணியாளர்களையும் உயர்தர வணிகப் பள்ளிகளுக்கு (B-Schools) அனுமதிக்கறதுக்கு ஒரு முக்கிய நுழைவு வாயிலா இருக்கு. 2025-ம் ஆண்டு NMAT தேர்வுக்கான பதிவு ஆகஸ்ட் 1-ல் தொடங்கி, அக்டோபர் 10 வரை நடக்குது, மற்றும் தேர்வு நவம்பர் 5 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்படுது. இந்த தேர்வு, இந்தியாவில் மட்டுமில்லாம, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஹங்கேரி, மொராக்கோ மாதிரியான நாடுகளிலும் MBA படிப்புக்கு வழி வகுக்குது. NMIMS மும்பை, SPJIMR, TAPMI, KJ சோமையா மாதிரியான முன்னணி B-Schools இந்த தேர்வு மதிப்பெண்களை ஏத்துக்குது.

NMAT தேர்வு: இது என்ன?

NMAT, அதாவது NMIMS Management Aptitude Test, முதலில் NMIMS பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது, ஆனா இப்போ Graduate Management Admission Council (GMAC) இதை நடத்துது. இது ஒரு தேசிய அளவிலான MBA நுழைவுத் தேர்வு, இதன் மதிப்பெண்கள் இந்தியாவில் 78-க்கும் மேற்பட்ட B-Schools மற்றும் சர்வதேச அளவில் பல கல்லூரிகளில் ஏத்துக்கப்படுது. NMAT-ன் முக்கிய சிறப்பு, இது மாணவர்களுக்கு வசதியான ஒரு தேர்வு முறை. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு தேதி, நேரம், மற்றும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம், மேலும் ஒரு தேர்வு காலத்தில் மூணு முறை வரை இதை எழுதலாம். ஒவ்வொரு முறையும், சிறந்த மதிப்பெண்ணை மட்டும் கல்லூரிகளுக்கு அனுப்பலாம்.

தேர்வு முறை

NMAT தேரவு கணினி அடிப்படையிலானது (computer-based) மற்றும் computer-adaptive வடிவத்தில் நடத்தப்படுது. இதாவது, ஒரு கேள்விக்கு சரியா பதில் சொன்னா, அடுத்த கேள்வி கொஞ்சம் கடினமாக இருக்கும். இந்த முறை, மாணவர்களின் திறனை துல்லியமா மதிப்பிட உதவுது. தேர்வில் மொத்தம் 108 கேள்விகள், 120 நிமிடங்களில் (2 மணி நேரம்) பதில் அளிக்கணும். மூணு பிரிவுகள் இருக்கு:

Language Skills (36 கேள்விகள், 28 நிமிடங்கள்): இதில் ஆங்கில இலக்கணம், புரிதல் (Reading Comprehension), மற்றும் சொல்லகராதி (Vocabulary) சோதிக்கப்படுது.

Quantitative Skills (36 கேள்விகள், 52 நிமிடங்கள்): கணிதம், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, தரவு பகுப்பாய்வு (Data Interpretation) மாதிரியான தலைப்புகள்.

Logical Reasoning (36 கேள்விகள், 40 நிமிடங்கள்): புரிதல், தர்க்கரீதியான முடிவெடுத்தல், மற்றும் புதிர்கள் (Puzzles).

ஒவ்வொரு பிரிவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுது, மற்றும் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் (negative marking) இல்லை. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்குது. மதிப்பெண்கள் 36 முதல் 360 வரை இருக்கும், ஒவ்வொரு பிரிவும் 12 முதல் 120 வரை மதிப்பிடப்படுது.

NMAT 2025: முக்கிய தேதிகள் மற்றும் பதிவு

2025-ம் ஆண்டு NMAT தேர்வுக்கான முக்கிய தேதிகள்:

பதிவு தொடக்கம்: ஆகஸ்ட் 1, 2025

பதிவு முடிவு: அக்டோபர் 10, 2025

தேர்வு காலம்: நவம்பர் 5 முதல் டிசம்பர் 20, 2025

மறு தேர்வு (Retake) பதிவு: ஆகஸ்ட் 11 முதல் டிசம்பர் 16, 2025.

பதிவு செய்ய, மாணவர்கள் GMAC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான mba.com/exams/nmat-க்கு செல்லணும்.

பதிவு கட்டணம் ₹3,000 + வரிகள், மறு தேர்வுக்கு அதே கட்டணம், மற்றும் தேதி மாற்றத்துக்கு ₹1,200 + வரிகள்.

பதிவு செய்யும் போது, மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், பணி அனுபவம்,

மற்றும் 5 கல்லூரிகளை தேர்ந்தெடுக்கணும். கூடுதல் கல்லூரிகளுக்கு மதிப்பெண்கள் அனுப்ப ₹400 + வரிகள் செலுத்தணும். பதிவு செய்யும் போது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (1 MB, JPEG/JPG) மற்றும் அரசு அடையாள அட்டை விவரங்கள் தேவை.

தகுதி மற்றும் தயாரிப்பு

NMAT தேரவுக்கு தகுதி மிக எளிமையானது:

எந்தவொரு பிரிவில் பட்டப்படிப்பு (10+2+3 அல்லது 4 வருட படிப்பு) முடிச்சிருக்கணும், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு.

இறுதி ஆண்டு படிக்கற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு இல்லை.

தயாரிப்புக்கு, மாணவர்கள் NMAT Official Guide, முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மற்றும் GMAC-யின் இலவச மற்றும் கட்டண பயிற்சித் தேர்வுகளை பயன்படுத்தலாம். CAT தேர்வு தயாரிப்பு செய்யறவங்களுக்கு NMAT சற்று எளிதாக இருக்கும், ஏன்னா இதன் கேள்விகள் எளிது முதல் மிதமான கடினத்தன்மை வரை இருக்கு. 3-4 மாதங்கள் தீவிரமான தயாரிப்பு, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்யறது, மற்றும் மாதிரி தேர்வுகள் (mock tests) எழுதறது மிக முக்கியம். IMS, Career Launcher மாதிரியான பயிற்சி மையங்கள், 240+ மதிப்பெண்கள் எடுக்க உதவும் வகையில் பயிற்சி அளிக்குது.

NMAT-ஐ ஏற்கும் முக்கிய கல்லூரிகள்

NMAT மதிப்பெண்கள் இந்தியாவில் 50+ முன்னணி B-Schools-ல் ஏத்துக்கப்படுது. சில முக்கிய கல்லூரிகள்:

NMIMS மும்பை: MBA மற்றும் MBA Pharmaceutical Management-க்கு 209 மற்றும் 190 மதிப்பெண்கள் கட்-ஆஃப்.

SPJIMR மும்பை: Global Management Programme.

TAPMI மணிப்பால்: அனைத்து MBA படிப்புகள்.

KJ சோமையா: MBA மற்றும் பிற படிப்புகள்.

XIMB புவனேஸ்வர், ISB, VIT வேலூர், SDA Bocconi.

இந்த கல்லூரிகளில், NMAT மதிப்பெண்கள் மட்டுமல்லாம, Group Discussion (GD), Personal Interview (PI), மற்றும் Case Analysis மாதிரியான அடுத்த கட்ட தேர்வுகளும் இருக்கு. NMIMS மும்பை, 2025-ல் புதிய competency test-ஐ அறிமுகப்படுத்தி, NMAT மதிப்பெண்களுக்கு 20% முக்கியத்துவம் மட்டும் கொடுக்குது.

NMAT-ன் சிறப்பு அம்சங்கள்

மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு தேதி, நேரம், மற்றும் 73 நகரங்களில் உள்ள 76 மையங்களில் ஒன்னை தேர்ந்தெடுக்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் (Online Proctored) எழுதவும் வசதி இருக்கு.

ஒரு தேர்வு காலத்தில், மூணு முறை எழுதலாம், ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்கணும்.

எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை: இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்குது.

தேர்வு முடிஞ்ச 48 மணி நேரத்துக்குள்ள மதிப்பெண்கள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில், VIT வேலூர், SRM சென்னை, மற்றும் IFIM மாதிரியான கல்லூரிகள் NMAT மதிப்பெண்களை ஏத்துக்குது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை மாதிரியான நகரங்களில் தேர்வு மையங்கள் இருக்கு, இது மாணவர்களுக்கு பயண செலவை குறைக்குது. தமிழ்நாட்டு மாணவர்கள், CAT-ஐ விட NMAT எளிது என்பதால், இதை ஒரு முக்கிய வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com