
டெக் உலகில் மீண்டும் இப்போது புயலடிக்கத் தொடங்கியுள்ளது. TCS, Microsoft, Intel, Meta, Panasonic போன்ற உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் 2025-ல் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைச்சு, தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிட்டு இருக்கு.
2025-ல் டெக் துறையில் வேலை நீக்கங்கள் ஒரு பெரிய அலை மாதிரி உருவாகியிருக்கு. Layoffs.fyi-ன்படி, 2025-ல் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்கப்பட்டிருக்கு. TCS, Microsoft, Intel, Meta, Panasonic போன்ற நிறுவனங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்குது. இந்த வேலை நீக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக, AI மற்றும் ஆட்டோமேஷனின் எழுச்சி, பொருளாதார நிச்சயமின்மை, செலவு குறைப்பு, மற்றும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு (restructuring) உள்ளன.
ஒவ்வொரு நிறுவனமும் இந்த மாற்றத்தை வெவ்வேறு விதமாக அணுகுது. சிலர் AI-ஐ காரணமாக சொல்ல, சிலர் திறன் பொருத்தமின்மை (skill mismatch) மற்றும் செயல்திறனை (performance) மேம்படுத்துவதற்காக ஆட்குறைப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான Tata Consultancy Services (TCS), உலகளவில் 6,13,000 ஊழியர்களைக் கொண்டிருக்கு (ஜூன் 2025 நிலவரப்படி). இதில் 2% (சுமார் 12,200 வேலைகள்) குறைக்கப்படுது, குறிப்பாக மிடில் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் இதில் பாதிக்கப்படுவாங்க. எனினும். இந்த வேலை நீக்கம் AI-னால் இல்லை, மாறாக திறன் பொருத்தமின்மை (skill mismatch) காரணமாகவும், ஊழியர்களை புதிய ப்ராஜெக்ட்களுக்கு மாற்ற முடியாத சூழல் காரணமாகவும் மேற்கொள்வதாக அதன் CEO தெளிவுபடுத்தியிருக்கார்.
TCS-ல் 5.5 லட்சம் ஊழியர்கள் அடிப்படை டிஜிட்டல் திறன்களிலும், 1 லட்சம் பேர் மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் பயிற்சி பெற்றிருக்காங்க. ஆனாலும், சில சீனியர் ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற முடியாமல் இருக்காங்க. இதனால், இவர்களை ப்ராஜெக்ட்களில் பயன்படுத்த முடியவில்லை. TCS இந்த ஊழியர்களுக்கு severance packages, extended health insurance, மற்றும் outplacement support வழங்க திட்டமிட்டிருக்கு. ஆனாலும், இந்த வேலை நீக்கம் இந்திய IT துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.
Microsoft, 2025-ல் 15,000-க்கும் மேற்பட்ட வேலைகளை குறைச்சிருக்கு, கூடுதலாக 2,000 underperformers-ஐயும் நீக்கியிருக்கு. இதில் Xbox மற்றும் gaming divisions கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு, 9,100 வேலைகள் குறைக்கப்பட்டிருக்கு. Microsoft CEO Satya Nadella, இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளுக்கு ஏற்பவும், AI இன்ஃப்ராஸ்ட்ரக்சரில் $80 பில்லியன் முதலீடு செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இருக்குன்னு கூறியிருக்கார்.
Microsoft-ன் financial performance சூப்பராக இருந்தாலும், management layers-ஐ குறைத்து, engineers-களின் ratio-வை அதிகரிக்கவும், AI-powered enterprise solutions-ல் முதலீடு செய்யவும் இந்த வேலை நீக்கங்கள் நடக்குது. Xbox head Phil Spencer, “strategic growth” மற்றும் “agility” மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் அவசியம்னு குறிப்பிட்டிருக்கார். ஆனாலும், இந்த வேலை நீக்கங்கள் ஊழியர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கு.
Intel, 2025-ல் 24,000 வேலைகளை (அதாவது, அதன் மொத்த workforce-ன் கால் பகுதி) குறைக்க திட்டமிட்டிருக்கு. இதில் Oregon-ல் 2,392, California-வில் 1,935, Arizona-வில் 696 வேலைகள் உட்பட, US-ல் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்கப்பட்டிருக்கு. புதிய CEO Lip-Bu Tan, “leaner and more efficient” நிறுவனமாக மாறுவதற்கு இந்த மாற்றங்கள் அவசியம்னு கூறியிருக்கார்.
Intel-ன் chip manufacturing (Foundry division) மற்றும் automotive chip unit (ஜெர்மனியில்) மிகவும் பாதிக்கப்பட்டிருக்கு. ஜெர்மனி மற்றும் போலந்தில் தொழிற்சாலை திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, Costa Rica-வில் இருந்து Vietnam-க்கு சில வேலைகள் மாற்றப்பட்டிருக்கு. இந்த மாற்றங்கள், overbuilding மற்றும் demand குறைவு காரணமாக நடக்குது. Intel, AI மற்றும் machine learning-ல் முதலீடு செய்ய இந்த செலவு குறைப்பு அவசியம்னு கருதுகிறது.
Meta, அதன் Reality Labs division-ல் (VR மற்றும் AR products, Quest headsets) வேலை நீக்கங்களை அறிவிச்சிருக்கு, குறிப்பாக Supernatural fitness app போன்ற ப்ராஜெக்ட்கள் பாதிக்கப்பட்டிருக்கு. முன்னதாக, 3,600 ஊழியர்களை (5% workforce) “low performers” என்று குறிப்பிட்டு நீக்கியிருக்கு.
Meta, mixed reality experiences-ஐ மேம்படுத்தவும், AI-ல் முதலீடு செய்யவும் இந்த மாற்றங்களை செய்யுது. Panasonic, 10,000 வேலைகளை (4% workforce) குறைக்க திட்டமிட்டிருக்கு, இதில் பாதி ஜப்பானிலும், பாதி வெளிநாடுகளிலும் நடக்குது. CEO Yuki Kusumi, TVs மற்றும் industrial products போன்ற slow-growth பகுதிகளை குறைத்து, AI மற்றும் future technologies-ல் முதலீடு செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருக்கார்.
AI மற்றும் ஆட்டோமேஷனின் எழுச்சி, டெக் துறையில் பாரம்பரிய வேலைகளை மாற்றி, புதிய திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குது. World Economic Forum-ன்படி, அடுத்த 5 வருடங்களில் 41% நிறுவனங்கள் AI காரணமாக workforce-ஐ குறைக்கலாம்னு எதிர்பார்க்குது. TCS-ல் manual testing போன்ற வேலைகள் AI ஆல் மாற்றப்படுது, Microsoft மற்றும் Intel AI infrastructure மற்றும் chip design-ல் முதலீடு செய்யுது.
ஆனாலும், இந்த மாற்றம் ஊழியர்களுக்கு பெரிய சவாலாக இருக்கு. மிடில் மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவது கடினமாக இருக்கு, இது வேலை இழப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
இனி டெக் துறையில் இருக்கும் ஊழியர்கள் புதிய திறன்களை கற்று, AI-driven உலகத்துக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது! உஷாரா இருங்க!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.