

இந்தியாவில் உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் இளங்கலை படிப்புகளுக்கன நுழைவுத்தேர்வு விண்ணப்பம் மற்றும் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள், IITs, NITs, IIITs போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் AIIMS, JIPMER, AFMC போன்ற மருத்துவ கல்வி மையங்கள் வரை பல துறைகளில் வாய்ப்புகள், பல்கலைக்கழக சேர்க்கைகள், நுழைவுத் தேர்வுகள் – ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தேபோல் NIFT, NID போன்ற வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள், IIMs (Indore, Rohtak) போன்ற மேலாண்மை கல்வி மையங்கள், National Law Universities (NLU) போன்ற சட்டப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
இந்த அனைத்து நிறுவனங்களிலும் சேர்வதற்கான விண்ணப்பத் தேதிகள், தகுதி விதிமுறைகள் மற்றும் நுழைவுத் தேர்வு விவரங்களை மாணவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தயாராக இருப்பது மிகவும் அவசியம். மத்திய கல்வி நிறுவனங்கள் என்பதால் சரியான தகவலுடன் விழிப்புணர்வாக செயல்படுவது சிறப்பு.
கலை & அறிவியல் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான CUET- 2026 விண்ணப்பம் முடிவடைந்த நிலையில் அதற்கான நுழைவுத்தேர்வு வரும் மே 11 தொடங்கி 31 வரை நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான IITs, NITs, IIITs சேர்க்கைக்கு JEE Main/Advanced – நுழைவுத்தேர்வு விண்ணப்பம் வரும் ஏப். 23 தொடங்குகிறது. அதற்கான தேர்வு மே 17 நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான AIIMS, JIPMER, AFMC சேர்க்கைக்கு NEET தேர்வுக்கான விண்ணப்பம் பிப். 8 முதல் மார்ச் 8 வரை எனவும், அதனை தொடர்ந்து மே 3, 2026 தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு (Design) இளங்கலை படிப்புகளுக்கான NID (The National Institute of Design) -யின் DAT தேர்வுகள் இரண்டு கட்டங்களை நடைபெறும் (Prelims – ஜனவரி; Mains – ஏப்ரல் முதல் மே வரை) நடைபெறும். மேலாண்மை (Integrated) படிப்புகளுக்கான IPMAT / JIPMAT – நுழைவுத்தேர்வு விண்ணப்பத்திற்கு மார்ச் 14 கடைசி, அதை தொடர்ந்து IPMAT (IIM Indore) மே 4, 2026 மற்றும் IPMAT (IIM Rohtak) மே 10, 2026 நடைபெறும்.
ஹோட்டல் மேலாண்மை NCHM (National Council for Hotel Management)-யின் JEE இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஏப்ரல் 25 நடைபெறும். விவசாய படிப்புகளுக்கான ICAR Quota சேர்க்கை – CUET தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஜூலை முதல் செப்டம்பர் வரை சேர்க்கை நடைபெறும். கடல்சார் கல்விக்கான IMU (Indian Maritime University) CET – நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஏப்ரல் 24 கடைசி தேதி அதனை தொடர்ந்து மே 24 தேர்வு நடைபெறும். புள்ளிவிவர இளங்கலை படிப்புகளுக்கான ISI Entrance – விண்ணப்பிக்க மார்ச் 13 கடைசி; மேலும் தேர்வு மே 10 நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுள்ளது.
விண்வெளி அறிவியல் படிப்புகளுக்கான IIST (ISRO-வின் கீழ்) சேர்க்கை – JEE Advanced - கான தேர்வு மே 17 நடைபெறும். தடயவியல் அறிவியல் (B.Sc Forensic Science) – NFSU 2026–27 கல்வி ஆண்டிற்கான NFAT நுழைவுத்தேர்வு கிடையாது , அதற்கான சேர்க்கை CLAT, CUET, JEE, GATE, GPAT உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என அறிவித்துள்ளது
ஆசிரியர் கல்விக்கான Integrated B.Ed (ITEP) – மத்திய அரசு கல்லூரிகளின் NCET நுழைவுதேர்வு விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி தேதி அதனைத்தொடர்ந்து தேர்வு ஏப்ரல் 17 நடைபெறும். இதழியல் (Bachelor) படிப்புகளுக்கான JNU, Jamia Millia Islamia, IIMC – CUET PG தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். மேலும் விமானப் போக்குவரத்து படிப்புகளுக்கான NFTI, Air Force Academy – IGRUA Entrance / AFCAT மூலம் சேர்க்கை நடைபெறும், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 கடைசி தேதி, எழுத்துத் தேர்வு மே 3 நடைபெறும் அதனை தொடர்ந்து நேர்காணல் மற்றும் தகுதி தேர்வு ஜூன் 1, 2026 நடைபெறும். காப்பீட்டுக் கணித அறிவியல் படிப்புகளுக்கான ACET தேர்விற்கு விண்ணப்பிக்க மே 14, 2026 கடைசி தேதி அதற்கான எழுத்து தேர்வு ஜூன் 13 நடைபெறும்.
CA / CS / CMA – ICAI, ICSI, ICMAI நிறுவங்களின் Foundation நுழைவுத்தேர்வுகளுக்கான விண்ணப்பக் கடைசி தேதி, ICAI மார்ச் 16, ICSI பிப்ரவரி 15, ICMAI ஏப்ரல் 15 மற்றும் CA Foundation தேர்வுகள் மே 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும், CSEET -க்கான நுழைவுத்தேர்வுகள் ஜூன் 1முதல் 4, 2026 நடைபெறும், CMA தேர்வுகள் ஜூன் 14, 2026 நடைபெறும். சமையல் கலை மற்றும் சுற்றுலா (Culinary Arts/Tourism) IHMs; WGSHA (Manipal) கல்வி நிறுவனத்தின் NCHMCT JEE நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி தேதி, அதற்கான தேர்வு ஏப்ரல் 25 நடைபெறும்.
விளையாட்டு இளங்கலை படிப்பிற்கான National Sports University-யின் NSU நுழைவுத்தேர்வு , LNIPE (Gwalior), NSNIS (Patiala) நிறுவனங்களின் NSNIS சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் திரைப்படப் படிப்புக்கான FTII (Pune); SRFTI (Kolkata) கல்வி நிறுவங்களின் JET போன்ற நுழைவுத்தேர்வுக்களுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.