10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு '3096 நாட்கள்' அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்த கதையை கேட்டிருக்கிறீர்களா?. உங்களை நொடிக்கு நொடி பதட்டத்திலேயே வைத்திக்கும் ஒரு திரில்லர் திரைப்படம்தான் '3096 days'.
ஆஸ்திரிய நாட்டினை சேர்ந்த நடாஷா காம்புஷ், வொல்ஃப்காங் ப்ரிகோபிலால் கடத்தப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் 3096 days. 1998 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி, 10 வயதான நடாஷா வியன்னாவில் உள்ள பள்ளிக்குத் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அவரின் தாயுடன் சண்டையிட்டு விட்டு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த அச்சமயத்தில் ஒரு மர்ம நபர் நடாஷாவை கடத்தி செல்கிறார். படத்தின் தொடக்கமே இப்படியாக தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு பெரிய தேடுதல் வேட்டையின் விளைவாக, நடாஷா கடத்தப்பட்டதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் முடிவு செய்யப்படுகிறது. போலீசார் விசாரணையில் நடாஷா ஒரு வெள்ளை மினி வேனுக்குள் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததாக ஒரு சாட்சி கூறுகிறார்கள். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வெள்ளை மினி வேன்கள் சோதனையிடுகின்றனர், ஆனாலும் அவர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடத்தல்காரனால் கடத்தப்பட்ட நடாஷா எனும் குழந்தையை ஆரம்பத்தில் அவன் இரக்கத்துடன் நடத்தினாலும், பின்னாளில் நடாஷா வளர வளர அவனது குணம் மாறுகின்றது. கடத்தல்காரன் தனது வீட்டின் பேஸ்மென்ட்டில் அடைத்து வைத்து வருடக்கணக்கில் நடாஷாவை கொடுமை செய்துவந்துள்ளார். நடாஷா பெரியவளானதும் அவளை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார் அந்த கடத்தல்காரன். ஒருமுறை இருவரும் வெளியே சென்றபோது, நடாஷா கடத்தல்காரனிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். இதுகுறித்து ஒரு பெண்ணிடம் அவர் உதவி கேட்கும்போது அப்பெண்ணுக்கு ஜேர்மன் மொழி தெரியாமல் போகவே அங்கு நடாஷா கடத்தல்காரனிடம் மாட்டிக்கொள்கிறார். மறுபடியும் சித்திரவதைகள் தொடர்கிறது. இதனையடுத்து, சிலநாட்கள் கழித்து, கடத்தல்காரனிடம் நயமாக பேசி அவனோடு காரினை சேர்ந்து கழுவ அனுமதி வாங்கி மறுபடியும் வெளி உலகிற்கு வருகிறார். கடத்தல்காரன் அசந்த நேரத்தில் கொஞ்சமாக திறந்திருந்த வாயிற்கதவினை கடந்து நடாஷா ஓடும் அந்த பகுதி காண்போரை Seat edgeக்கே கொண்டு சென்றுவிடும்.
அதன்பிறகு அருகில் இருக்கும் மூதாட்டியிடம் உதவி நாடி தப்பித்து தன் குடும்பத்தோடு சேர்கிறார் நடாஷா. இதுகுறித்து, 2010 ஆம் ஆண்டில், அவர் தனது சுயசரிதையான ' 3,096 days' என்ற புத்தகத்தில் தனது அனுபவத்தை கதையாக எழுத்திருக்கிறார். இந்தப் புத்தகமே, 2013 ஆம் ஆண்டில் வெளியான '3096 days' என்ற திரைப்படத்திற்கு மூலக்கதையாக அமைந்தது. முழுக்கதையும் இதிலே வந்துவிட்டதே என்று நினைக்காதீர்கள். இந்த திரைப்படத்தை நீங்கள் பார்க்கும் போது நடாஷாவின் உலகத்திற்கே சென்றுவிடும் ஒரு உணர்வை உங்களுக்கு இது கட்டாயம் தரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.