விறுவிறுப்பாக நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயம்...!!

விறுவிறுப்பாக நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயம்...!!
Published on
Updated on
1 min read

தொழிலாளர்கள் தினத்தையொட்டி ஈரோடு ரேக்ளா அசோசியேஷன், ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஆதி வனம் சார்பில் காளை, குதிரைகளுக்கான ரேக்ளா பந்தயம் ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் வெகு உற்சாகமாக நடைபெற்றது.

இந்த ரேக்ளா பந்தயத்தை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பி சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஒற்றை மாடுகள் பந்தயம் மூன்று பிரிவுகளாகவும், குதிரை வண்டி பந்தயம் மூன்று பிரிவுகளாகவும் நடைபெற்றது.

அதன்படி, பெரிய ஒத்தை மாடு 8 மைல், சிறிய ஒத்தை மாடு 6 மைல், புதிய குதிரைகள், 44 அங்குல உயர சின்ன குதிரைகளுக்கு 8 மைல் தொலைவும், பெரிய குதிரைகளுக்கு 10 மைல் தொலைவும் இலக்காக வைக்கப்பட்டிருந்தன. 

பந்தயம் தொடங்கியதும்  லக்காபுரத்திலிருந்து - ஈரோடு - மொடக்குறிச்சி சாலையில், குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓட தொடங்கின. ஈரோடு மாவட்ட  சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, காங்கேயம், பொள்ளாச்சி, ஊத்துக்குளி, கோவை, கரூர், உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

இதனை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com