கார்த்திக் சுப்புராஜுடன் இசையால் கைகோர்க்கும் இளையராஜா! "அவரது இசையுடன் வளர்ந்ததிலிருந்து, அவருடன் பணியாற்றுவது வரை" - உற்சாகத்தில் இயக்குநர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் 10வது திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்றும், இந்த திரைப்படம் இளையராஜாவின் 1540வது படமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Karthik Subbaraj Ilaiyaraaja combo
Karthik Subbaraj Ilaiyaraaja comboKarthik Subbaraj Ilaiyaraaja combo
Published on
Updated on
1 min read

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்திற்காக ஒரு மாஸ் கூட்டணியை அறிவித்துள்ளார். முன்பாக சூர்யா நடிப்பில் உருவாக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படத்தை இயக்கிய இவர், தான் இயக்கவிருக்கும் 10வது திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்றும், இந்த திரைப்படம் இளையராஜாவின் 1540வது படமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இதுகுறித்த அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தக் கூட்டணி கார்த்திக் சுப்புராஜ் திரைப்பயணத்தில் ஒரு சிறப்பான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ், இந்தக் கூட்டணியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், “அவரது இசையுடன் வளர்ந்ததிலிருந்து, அவருடன் பணியாற்றுவது வரை” என்று நெகிழ்ச்சி பொங்க எழுதியிருந்தார். அந்தக் காணொளியில், இளையராஜா ஒரு இசையமைத்தும், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருடன் உற்சாகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தது இடம்பெற்றிருந்தன. இசை ஞானி இளையராஜாவும் கலகலப்பாக, மகிழ்ச்சியான உரையாடல்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

ஜிகர்தண்டா, மகான் மற்றும் ரெட்ரோ போன்ற, வெற்றி திரைப்பட இயக்குநரான கார்த்திக் சுப்பராஜின் ஏறக்குறைய அனைத்துத் திரைப்படங்களுக்கும் இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தற்போது அந்த வெற்றி கூட்டணியில் இருந்து சற்று மறுபட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குறிக்கிறது. இதற்கு முன்பு, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்தது மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தது. 

கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய 'ரெட்ரோ' படத்தில் சூர்யாவும், பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் . இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்த காதல் கலந்த அதிரடி திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சூர்யாவின் நடிப்பு, நேர்த்தியான கதை சொல்லும் முறை மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசைக்காக சினிமா ரசிகர்களிடையே  பாராட்டுகளைப் பெற்றது. இதற்கிடையில், திரையுலகில் ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகும் இளையராஜா இந்திய சினிமாவின் மிகவும் ப்ரியப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். தற்போது, ​​கார்த்திக் சுப்பராஜின் வரவிருக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் புதிய தலைமுறை திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com