"கூகுள் குட்டப்பா" படத்தில் நடித்த பிரபல நடிகரும் 'பிக் பாஸ்" போட்டியாளருமான தர்ஷன் மீது இன்று ஜேஜே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த டீ கடைக்கு, சென்றுள்ளார் நீதிபதியின் மகன் ஆதிக்கும் தர்ஷனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பார்க்கிங்கில் விடப்பட்ட காரை எடுக்க சொன்னபோது, நீதிபதியின் மகன் தேதேவையற்றை வார்த்தைகளை பேசியதாகவும், இதனால் இருவருக்கு இடையேயும் வாக்குவாதம் முற்றி, தர்ஷன் மற்றும் அவரது உடன் இருந்த நண்பன் லோகேஷ் இருவரும் ஆதியை தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஆதியோடு இருந்த அவரது மனைவி லாவண்யா மற்றும் மாமியார் மகேஸ்வரி தாக்கியுள்ளனர் இதில் காயமடைந்த மூவரும் அண்ணா நகர் மருத்துமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதியின் தரப்பினர், தர்ஷன் அவரது நண்பர் தங்களை தாக்கி காயப்படுத்தியதாக போலீசில் புகைரளித்துள்ளனர்.
அதே போல தர்ஷன் தரப்பிலிருந்தும், பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை எடுக்க மறுத்து தர்சன் மற்றும் லோகேஷை தகாத வார்திகளில் பேசி, சூடான டீயை இவர்கள் மீது ஆதி ஊத்தியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த காவல் துறையினர் ஆதி மற்றும் அவரது மனைவி லாவண்யா மீது காயப்படுத்துதல், தகாத வார்த்தைகளை பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் தர்ஷன் மற்றும் லோகேஷின் மீதும் பெண்வன்கொடுமை, காயப்படுத்துதல், தகாத வார்த்தைகளை பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்