இது படமா? இல்ல குறும்படமா? அமெரிக்காவில் தன் மகனுக்காக.. நடிகர் நெப்போலியன் நடித்த காவியம் - குவியும் விமர்சனம்

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் நெப்போலியனின் மகன்களான தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
Actor Napoleon Starrer Produced by Sons Faces Heavy Criticism Online
இது படமா? இல்ல குறும்படமா? அமெரிக்காவில் தன் மகனுக்காக.. நடிகர் நெப்போலியன் நடித்த காவியம் - குவியும் விமர்சனம்
Published on: 
Updated on: 
1 min read

பிரபல நடிகர் நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகன்கள் தயாரித்துள்ள புதிய படத்தில் அவர் நடித்துள்ளார்.

‘அமெரிக்க ஆவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் நெப்போலியனின் மகன்களான தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இப்படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

நெப்போலியன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலரும் சினிமா படப்பிடிப்பைக்கூட வேடிக்கை பார்க்காத தனியார் நிறுவன ஊழியர்கள் என்றும், முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது என்றும் இசை வெளியீட்டு விழாவில் நெப்போலியன் பேசியுள்ளார்.

America Aavi
America Aavi

நெப்போலியன் தனது மகன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதை யூடியூப் வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகப் பார்த்திருப்போம். இந்நிலையில், இந்தப் புதிய படத்தின் மூலம் இருவரும் தயாரிப்பாளர்கள் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இதில் நாசர், ரோஜா செல்வமணி, ஆர்.கே. செல்வமணி, பாண்டியராஜன், ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இசைத் தட்டை ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் ஆதித்யா ராம் வெளியிட தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.

இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானதைத் தொடர்ந்து ஆன்லைனில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. பலரும் இது திரைப்படம் போல அல்லாமல் குறும்படம் போல உள்ளதாக விமர்சித்துள்ளனர்.

Actor Napoleon Starrer Produced by Sons Faces Heavy Criticism Online
சூப்பர் ஸ்டார்களுடன் நடிப்பார், விவசாயிகளுடன் டீ குடிப்பார்! யார் இந்த நானா படேகர்.. இவரின் இன்னொரு முகம் தெரியுமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com