
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா என்னும் படம் 12 ஆண்டுகள் முன்பு வெளியாக வேண்டிய நிலையில் கடந்த ஜனவரியில் வெளியானது. அதற்காக நடந்த PRE RELEASE நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஷால், கைகள் நடுங்கியபடி மேடையில் பேசினார். அந்த நிகழ்வே அவர் உடல் மிக மோசமான நிலையில் இருப்பதை காண்பித்தது.
இந்நிலையில் தென்னிந்தியா திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ‘மிஸ் திருநங்கை’ அழகி போட்டியில் கலந்துகொண்ட நடிகர் விஷால், மேடையில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது மயக்கம் போட்டு விழுந்தார்.
பொதுவெளியில் மீண்டும் விஷாலின் உடல்நிலை குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன. ரசிகர்களும் இதனால் கவலை அடைந்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்