

நாடு முழுவதும் NEET தேர்வு முறைகேடு விவகாரத்தை முன்னிறுத்தி, பல்வேறு மாநிலங்களில் பல மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர் குழுக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடத்தின சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், CJP மீதான மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் பசுபதி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகை சனம் ஷெட்டி நேற்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசும் போது, போராட்டக்காரர்கள் அவருடைய மைக்கை பிடிங்கி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பாலன் இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் பேசியதாவது “இங்கே எத்தனை பேர் கரப்பான் பூச்சி கட்சி உறுப்பினர்கள்? எத்தனை பேர் மாணவர்கள்? இங்கே நடுநிலையோடு இருக்கும் மக்களாக தான் வந்துள்ளேன். மேலும் இங்கே பேசுகிறீர்களா இல்லையா? என இங்கு இருப்பவர்கள் கேட்டார்கள். நான் கோபித்து கொண்டு வெளியே போய்விட்டேன். ஏனென்றால் இங்கே பேசியவர்கள் பேச்சு அந்த நரேட்டிவ் அந்த அஜெண்டாவுல எனக்கு உடன்பாடு இல்லை என்றும் நீட்-க்கு எதிரான போராட்டத்தை அரசியல் அஜெண்டாவாக பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள்” என்று அரசியல் பரபரப்பு கருத்தை முன்வைத்திருந்தார். மேலும் நாங்கள் ஜோக்கர் கிடையாது.. நான் தளபதியுடைய தீவிரமான ஃபேன். நேற்று தான் ஜனநாயகன் FDFS பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்” என்று பேசும்போது கூட்டத்தில் இருந்த போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
அதனை தொடர்ந்து சனம் ஷெட்டி, “நான் பேசவா? இல்லை போகவா?” என்று பேசினார். அதற்கும் மறுப்பு தெரிவித்து அவரை வெளியேறுமாறு கண்டன கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த நடிகை சனம் ஷெட்டி, “இது ஜனநாயகம் கிடையாது” என்றும் “ எல்லோருக்கும் கருத்துரிமை இருக்கு” என்றும் பேசினார். தொடர்ந்து அவரது கருத்துக்கு போராட்டக்காரர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.மேலும் “நீங்கள் மாணவர்களுக்காக போராட்டம் செய்யும் போது நான் அவர்களுக்காக மட்டும் தான் பேசுவேன். எவன் சொல்லியும் நான் வரல. நானா வந்திருக்கேன்” என்று கூறும் போது அருகில் இருந்தவர்கள் அவருடைய மைக்கை பிடுங்கினர். இதையடுத்து நடிகை சனம் ஷெட்டி அங்கிருந்து கோபத்தோடு வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்ட காலத்தை விட்டு வெளியேறிய சனம் ஷெட்டி செய்தியாளர்களை சந்தித்து "நான் பேசிட்டு இருக்கும் போதே என்னோட மைக்கை புடுங்கிட்டாங்க. மாணவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன். ஆனால், நான் பேசும் சுதந்திரத்தை தடுத்து இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவித்தார். மேலும் நான் ஜனநாயகன் படம் பார்த்தால் ஜோக்கரா? என்றும் பேசும் போது மைக்கை புடுங்குகிறார்கள் இது தன அவர்களின் ஜனநாயகமா? என்றும் ஆவேசமாக பேசினார். “என்னை மைக்கை பிடுங்கி துரத்திட்டாங்க.. இதுலையே புரியுது இவங்க democracy -யோட லட்சணம்” என்றும் இவர்கள் democracy-காக போராடல, அரசியல் அஜெண்டாவுக்காக தான் போராடுறாங்க” என்றும் கூறிவிட்டு வெளியேறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.