“கன்னடத்து பைங்கிளி” - பத்ம ஸ்ரீ விருது பெற்ற நடிகை சரோஜா தேவி.. வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்!

1960 முதல் 1970 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரோஜா தேவி.
“கன்னடத்து பைங்கிளி” - பத்ம ஸ்ரீ விருது பெற்ற நடிகை சரோஜா தேவி.. வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் அபிநய சரசுவதி என்று அழைக்கப்படும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 1960 முதல் 1970 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரோஜா தேவி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து தனது நடிப்பு மற்றும் நடன திறமையில் ரசிகர்களை தன் வச படுத்தியவர்.

கன்னடத்து பைங்கிளி என திரையுலகினரால் அழைக்கப்படும் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த 22 படமும், புரட்சி தலைவர் எம்ஜியாருடன் சேர்ந்து 26 படங்களும் நடித்து அன்றைய கால கட்டத்தில் இருந்த முன்னணி கத நாயகர்களை விட அதிகம் சம்பளம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

காளிதாசன் என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் 200 மேற்பட்ட படங்களிலும், சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் மேலும் பல மாநில விருதுகளையும் பெற்று தனக்கென தனி சிறப்பை உருவாக்கியவர் நடிகை சரோஜா தேவி.

60 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வந்த இவர் தற்போது பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com