“அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்கள்” - அணையில் தத்தளித்த படக்குழுவினர்.. கைவிடப்படுமா காந்தாரா இரண்டாம் பாகம்?

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் வெளியாகி உலக அளவில் 400 கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்த ரிஷப் ஷெட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “காந்தார சாப்டர் 1” என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்க தொடங்கினர்.
kantara 2 movie shoot boat accident
kantara 2 movie shoot boat accidentkantara 2 movie shoot boat accident
Published on
Updated on
1 min read

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. இத்திரைப்படம் கர்நாடகா மாநிலத்தின் துளு மக்களால் கொண்டாடப்படும் பூத கோலா எனும் தெய்வ வாக்கு கூறுபவர் மற்றும் பஞ்சுருளி தெய்வம் தொடர்பான கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் வெளியாகி உலக அளவில் 400 கோடி ரூபாயை வசூல் செய்தது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்த ரிஷப் ஷெட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “காந்தார சாப்டர் 1” என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்க தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பிற்காக காந்தார படக்குழுவினர் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது இதில் 6 பேர் காயமடைந்த நிலையில் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால் சாப்டர் 1 படத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்த கபில் என்ற கலைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அதேபோல் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த ராகேஷ் என்பவரும் கேரளாவில் இருந்து நடிக்க வந்த விஜி என்ற நடிகரும் அடுத்தடுத்து மாரடைப்பில் உயிரிழந்தான். இந்நிலையில் இன்று சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்காக ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவினர் 30 சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் கேமரா மற்றும் சில தொழில்நுட்ப பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. படக்குழுவிற்கும் படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கும் அடுத்தடுத்து அசம்பாவிதம் ஏற்படுவது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. சிலர் இவை தற்செயலாக நடக்கும் விபத்துகள் என்று கூறிகின்றனர்.

ஆனால் சிலர் இந்த படப்பிடிப்பை நிறுத்த சொல்லி பஞ்சுருளி தெய்வமே படக்குழுவிற்கு எச்சரிக்கை கொடுப்பதாகவும். படப்பிடிப்பு குழுவின் ஏதோ ஒரு செயல் தெய்வத்திற்கு பிடிக்கவில்லை எனவே இவ்வாறு நடக்கிறது எனவும் கூறி வருகின்றனர். எனினும் படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இப்படத்தினை விடாமல் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com