"எனது அன்பு பெயர்த்திக்கும்.." அனிருத் - காவ்யா வரவேற்பு.. அழைப்பு விடுத்த ஸ்டாலின்!

தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
Anirudh and Kavya Maran Wedding Reception: MK Stalin Extends Invitation for Grand Event on Nov 21
"எனது அன்பு பெயர்த்திக்கும்.." அனிருத் - காவ்யா வரவேற்பு.. அழைப்பு விடுத்த ஸ்டாலின்!
Published on: 
Updated on: 
1 min read

தமிழ் திரையுலகின் டாப் இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு வருகின்ற நவம்பர் மாதம் 21ம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். விஜய் சந்திப்பின் போது அனிருத் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தனது பேத்தியான காவ்யா திருமணத்துக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

"பேரன்புடையீர்,

வணக்கம். வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு. எனது அன்புப் பெயர்த்தியும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா & முரசொலி மாறன் அவர்களின் பெயர்த்தியும் காவேரி & கலாரிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாரிதி மாறனுக்கும் லட்சுமி & ரவிச்சந்தர் அவர்களின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் கோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்." என அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின்.

திருமணம்

அனிருத் – காவ்யா திருமணம் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Anirudh and Kavya Maran Wedding Reception: MK Stalin Extends Invitation for Grand Event on Nov 21
RIP தேவா: திரையுலகை தாண்டிய வேதனை.. காற்றில் கரைந்தது 'தேனிசை தென்றல்' கானா பாடகர்களும் வேதனை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com