“மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது..” - ராமாயணம் குறித்து AR ரஹ்மானின் சுவாரஸ்யம் பேச்சு! 12 ஆண்டுகளுக்கு முன் வந்த கணிப்பு?

"இந்தியா தாண்டி உலகம் முழுவதும் இசையால் மேஜிக் செய்யக்கூடிய நீங்கள் நிச்சயம் ஒரு நாள் இராமாயணத்திற்கு இசையமைப்பீர்கள்.."
ramayana movie
Published on: 
Updated on: 
2 min read

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா – ரைஸ் ஆஃப் எ லெஜெண்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அமேசான் மியூசிக் சார்பில் நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், KGF யஷ் ராவணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளார்கள். இந்திய மொழிகள் உருவாகி வரும் இந்த திரைப்படம் சைனீஸ், ஜப்பான் உட்பட சுமார் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நவம்பர் 5-ம் தேதி உலக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘ராமாயணா’ திரைப்பாடல்களை பல்வேறு இசைக் கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியாக நடத்தினர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் ராமாயணா படக்குழு தமிழ் பாடல் லோகோவை அமேசான் மியூசிக்கில் வெளியிட்டார்கள்.

அந்த நிகழ்வில் பேசிய ஏ ஆர் ரகுமான் திரைப்படம் குறித்தும், ராமாயணம் குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது பள்ளியில் நான் பார்த்த ராமாயணம், ஆர் எஸ் மனோகரன் ராமாயணம், லங்கேஸ்வரன் மற்றும் இந்த ‘ராமாயணா’ திரைப்படம் இவை அனைத்துமே ஒரு சிறந்த பயணம். இதன் மூலம் நாம் அனைவரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். மேலும் நிறைய உணர்வுகளை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும் அப்பா, அம்மா மற்றும் மனைவிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை ராமாயணம் மூலம் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியினை இந்த மேடையில் படித்து காட்ட விரும்புகிறேன்.

அந்த வகையில் பல நாட்கள் என்னுடைய கனவில் ஒன்று தென்படுகிறது இந்தியா தாண்டி உலகம் முழுவதும் இசையால் மேஜிக் செய்யக்கூடிய நீங்கள் நிச்சயம் ஒரு நாள் இராமாயணத்திற்கு இசையமைப்பீர்கள் என நியூயார்க்கில் இருந்து 2014 ஆம் ஆண்டு சதீஷ் என்று ஒருவர் தெரிவித்திருந்தார். அது தற்பொழுது நிறைவேறி இருக்கிறது.

அதேபோல தென்னிந்திய வட இந்திய இசை அனைத்துமே அதிக அளவு பக்தி நிறைந்து இருக்கிறது. கிருஷ்ணர், ராமர் போன்ற கடவுள்களுக்கு பாடக்கூடிய துதி பாடல்களாகட்டும், கீர்த்தனை, தும்பி, வர்ணம் இவை அனைத்திலும் கிடைக்கக்கூடிய உந்துதல் மூலமாக ஒரு படைப்பாளியாக நான் இதை உருவாக்கியிருக்கிறேன்.‎

அவரை தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவி, “‎ராமாயணம் படத்தை உலக தரத்தில் கொண்டு வர பத்து வருடங்களாக படக்குழுவினர் உழைத்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, நான் இந்த கதையில் மூன்று வருடங்கள் பயணித்துள்ளேன். ராமாயணம் திரைப்படத்தை இந்தியாவின் சிறந்த திரைப்படமாக கொண்டுவர உழைத்து வருகிறார்கள். மேலும் தான் சீதையாக நடித்ததை பாக்கியமாக கருதுவதாக சாய் பல்லவி நெகிழ்ந்து பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com