ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர்.
மோகன்லால், சிவ ராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹ்திக் ரோஷன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
துரந்தர் 2, த்ரிஷ்யம் 3 படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான 3 அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகவும் உருவெடுத்துள்ளது.
வர்த்தக கண்காணிப்பு அமைப்பு சாக்னில்க் கூறுவதன்படி, வெளியான சில நாட்களிலேயே ரூ.541 கோடி வசூலைக் கடந்துள்ளது. முதல் வாரஇறுதியைக் கடந்தும், விடுமுறையைக் கடந்தும் தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்த்து வருகிறார் ரஜினிகாந்த்.
விரைவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த இராண்டாவது இந்திய படமாகவும் ஜெயிலர் 2 உருவெடுக்கும்.
த்ரிஷ்யம் 3 படத்தின் வசூலை ஜெயிலர் 2 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதை மேலே காணலாம்.
இதே வேகத்தில் சென்றால் விரைவில் ஜெயிலர் முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலான ரூ.604.74 -ஐ கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி, 500 கோடி வசூலைக் கடந்த படங்களைக் கொடுத்தவர். முதல் 1000 கோடி வசூலும் அவரது படத்தில் இருந்தே வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.