'ஹ்ருதயம்' படப்பிடிப்பில் இதயத்தை பறிகொடுத்தாரா பிரணவ் மோகன்லால்? கல்யாணி பிரியதர்ஷன் தாய் கொடுத்த பதிலடி!

கல்யாணி பிரியதர்ஷனுக்கும் பிரணவ் மோகன்லாலுக்கும் திருமணமா? ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த கல்யாணியின் தாய்.
கல்யாணி பிரியதர்ஷனுக்கும் பிரணவ் மோகன்லாலுக்கும் திருமணமா?
கல்யாணி பிரியதர்ஷனுக்கும் பிரணவ் மோகன்லாலுக்கும் திருமணமா? கல்யாணி பிரியதர்ஷனுக்கும் பிரணவ் மோகன்லாலுக்கும் திருமணமா?
Published on
Updated on
1 min read

மலையாளத் திரையுலகின் மிகவும் பிரபலமான இரண்டு நட்சத்திரங்களான, இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஆகியோரின் பிள்ளைகள், வணிக ரீதியாக வெற்றி பெறும் படங்களைத் தேர்ந்தெடுத்து, இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற படம்தான் மலையாளத்தில் வெளியான 'ஹ்ருதயம்'. இதில் இருவரும் நடித்து மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, விஷு பண்டிகை கொண்டாடப்பட்டபோது, 'நடிகை கல்யாணிக்கும் பிரணவ் மோகன்லாலுக்கும் திருமணம் நடக்குமா?' என்பது குறித்த ரசிகர்களின் யூகங்களுக்கு கல்யாணியின் தாய் பதிலளித்தார். சமூக ஊடகங்கள் மூலமாக கல்யாணியும் பிரணவும் காதல் என்ற பெயரில் ஒன்றாகி இருக்கவில்லை, மேலும்அப்படி எந்த ஒரு யூகங்களையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கவில்லை என்றாலும், ஒரு ஆர்வமுள்ள ரசிகர் சமூக வலைதளத்தில், "அவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள்?" என்று கருத்து கேட்டிருந்தார். கல்யாணியும் பிரணவும் 'ஹ்ருதயம்' (2022) மற்றும் 'வர்ஷங்கல்க்கு சேஷம்' (2024) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையில் அவர்களின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மிகவும் விரும்பி, அவர்கள் இருவரும் ஜோடி சேர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில், பிரியதர்ஷனின் முன்னாள் மனைவியும் நடிகையுமான லிஸ்ஸி லட்சுமி, மலையாளப் புத்தாண்டை முன்னிட்டு லிஸ்ஸி சில புகைப்படங்களைப் பதிவிட்டு, விஷு வாழ்த்துகளை தெரிவித்தார். ரசிகர்கள் விஷு வாழ்த்துக்களால் அவரது பதிவிற்கு கீழே கமெண்ட்களை நிரப்பினர். ஆனால் ஒரு ரசிகர், “கல்யாணி பிரணவ் திருமணம் காத்திருக்கிறோம்,” என்று கமெண்ட் செய்தார். அதற்கு லிஸ்ஸியின் பதிலாக, “பொய்ச் செய்தி,” என்று பதில் கமெண்ட் ஒன்றினை பதிவு செய்திருந்தார். இவர்கள் இருவரும் திரைத்துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் கல்யாணியும் பிரணவும் சிறுவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிந்து வளர்ந்துள்ளனர். ஒரு பேட்டியில், கல்யாணி பிரணவுடனான தனது உறவை 'சகோதரன்-சகோதரி போன்றது' என்று விவரித்ததோடு, அவரை 'அப்பு' என்றே குறிப்பிடுவதாகவும் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com