“நான் படம் எடுக்கும் போதுலா… நீ எவன்ட்ட சினிமா வாய்ப்பு கேட்டு அலஞ்சிட்டு இருந்தியோ..? விஜய் சேதுபதியை நேரடியாக தாக்கிய பிக்பாஸ் பிரவீன் காந்தி!!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 6 -ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் பிரவீன் காந்தி, விஜே பாரு, திவாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், யோகா ஆசிரியை நந்தினி, பிக் பாஸில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறினார். இதனால், பிக் பாஸ் வீட்டில் 19 போட்டியாளர்கள் இருந்தனர்.
வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார். இதில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின்போது பேசிய விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற உள்ளதாக தெரிவித்தார். இந்த வாரத்தில் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், வியானா, ஆதிரை, திவாகர் ஆகியோர் வெளியேறும் நபர்களின் பட்டியலில் இருந்தனர். இதில் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்று பிரவீன் காந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வழியனுப்ப வேண்டாம்..!
வழக்கமாக ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படும்போது மற்ற போட்டியாளர்கள் இறுதிவரை உடன் வந்து வழியனுப்புவார்கள். ஆனால் பிரவீன் காந்தி “அப்படி யாரும் எனக்கு வரவேண்டாம், உள்ளே போங்க.. தோத்துப்போனவன் மாதிரி treat பண்ணாதீங்க’ என சொல்லி எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.
மேலும் வெளியில்வந்து விஜய் சேதுபதி உடன் பேசும்போது 'நான் எலிமினேட் ஆகவில்லை. நான் எங்கும் இருப்பேன். இங்கே மேடையிலும் இருப்பேன், உள்ளே வீட்டிலும் இருப்பேன்' என கூறினார். அவர் வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு bye என்று கூட சொல்லாமல் வெளியில் வந்தது பற்றி விஜய் சேதுபதியும் கேள்வி எழுப்பியதற்கு யாரும் எங்கும் போக மாட்டார்கள் திரும்பி வருவோம் என தத்துவம் பேசினார். விஜய் சேதுபதி எவ்வளவோ பேச முயற்சித்தும் பிரவீன் காந்தி தத்துவமாகவே பேசிக்கொண்டிருந்தார். பிரவீன் காந்தி பேசிவிட்டு கிளம்பி சென்றபிறகு விஜய் சேதுபதி அதை சொல்லி எல்லோரிடமும் கலாய்த்திருந்தார்.
இந்த நேரத்தில்தான் பிரவீன் காந்தியுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “எவிக்க்ஷன் ஆகும் போதும் விஜய் சேதுபதி இவர கொஞ்சம் அதட்டி பேசும் போதும் பிரவீன் காந்தி மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்!?
பிரவீன் காந்தி மைண்ட் வாய்ஸ் - “நான் ரட்சகன் படம் எடுக்கும் போதுலா… நீ எவன்ட்ட சினிமா வாய்ப்பு கேட்டு அலஞ்சிட்டு இருந்தியோ..? ஆனா இப்போ எனக்கு அறிவுரை சொல்லிட்டு இருக்க.. என் நேரம்!! என தனது வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.