"உங்களுக்கு தெரியாத ஒன்னு .. சைலண்ட் சம்பவம் இருக்கு" - கடைசி நேரத்தில் 'ஜெயிலர் 2' குறித்து பற்றவைத்த நடிகர்! எகிறிய எதிர்பார்ப்பு!

படத்தில் தான் ஒரு பகுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்..
jailer 2
jailer 2
Published on: 
Updated on: 
1 min read

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் பிஜோர்ன் சுராவ். நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர் இசைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘Master the Blaster’ பாடல் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் பிஜோர்ன் சுராவ். இதையடுத்து, பீஸ்ட், சொப்பன சுந்தரி, டிராகன், கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர்ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்திலும் இடம்பெற்றுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த பாகமாக ‘ஜெயிலர் 2’ வெளியாக உள்ளது. முழுமையாக படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட  தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தையும் நாளை மறுநாள் (அக் 15) திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பிஜோர்ன் சுராவ், ‘ஜெயிலர் 2’ படத்தில் தான் ஒரு பகுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் எனக்குத் தெரியும். ஒரு சைலண்ட் சம்பவம் இருக்கு” என்று குறிப்பிட்டுள்ள அவர், அக்டோபர் 15-ஆம் தேதி ரசிகர்களுக்கும் அந்த விஷயம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெற்றிருப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும், ரசிகர்கள் இந்தப் படத்தைப் பெரிய திரையில் காண்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஜெயிலர் 1 படத்தில் மலையாள நடிகர் விநாயக் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடந்திருந்தது வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து அவர் தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அது போல பிஜோர்ன் சுராவ் கதையில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளாரா? அல்லது பீஸ்ட் படத்தில் ஒரு பாடலில் மட்டும் வருவது போல சில காட்சிகளில் மட்டும் இடம்பெற்றுள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ள நிலையில் இவர் பதிவிட்ட “ஒரு சைலண்ட் சம்பவம் இருக்கு” என்ற வாசகம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com