நடிகர் ஸ்ரீக்கு என்னதான் ஆச்சி? ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தவரின்.. கண்கலங்க வைக்கும் ஆபாச பதிவுகள்!

"இறுக்கப்பற்று" படத்தில் சானியா அய்யப்பனுக்கு ஜோடியாக நடித்து அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் இவர் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
actor sri
actor sri
Published on
Updated on
1 min read

விஜய் டிவியில் வெளியான "கானா காணும் காலங்கள்" தொடரின் மூலமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீ அதன் பிறகு இவர் மாநகரம், வழக்கு என் 18/9, வில் அம்பு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புக்கென சில ரசிகர்களை சேகரித்திருந்தார்.

படங்களை நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை 2023ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான "இறுக்கப்பற்று" படத்தில் சானியா அய்யப்பனுக்கு ஜோடியாக நடித்து அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் இவர் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம், அதிக ரசிகர்களை பெற்ற இவர் அதன் பின்னர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவர் படங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் "ஸ்ரீ ப்ளூ டிக்" என்ற இன்ஸ்டா பக்கத்தில் வெளியான பதிவுகள் அமைந்திருக்கிறது.

அந்த இன்ஸ்டா பக்க பதிவுகளில் மிகவும் உடல் மெலிந்து தலைமுடியெல்லாம், அதிகம் வைத்து கொண்டு பார்பதற்கேய பரிதாபமாக உள்ள நிலையில் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் சில ஆபாச வீடியோக்களையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது பொய்யான பதிவுகள் என்று சிலர்,கருத்து தெரிவித்தாலும் இன்னும் சிலர் இவருக்கு மனநல பாதிப்பு உள்ளதாகவும் இதற்காக இவர் நல்ல மருத்துவரை அணுகவேண்டும் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் இதுவரை அந்த இன்ஸ்டா பக்கம் இவருடையது என்பதற்கான எந்த தகவலும் கிடைக்கப்படவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com