"Gucci கடையில் தொடங்கிய காதல்.. தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ரொனால்டோ!" குழந்தைகள் முன்னிலையில் ஒரு சிம்பிள் வெட்டிங்

தங்களின் 5 குழந்தைகளின் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
Cristiano Ronaldo Marriage
Cristiano Ronaldo Marriage
Published on
Updated on
2 min read

தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ திருமணம் செய்துள்ளார். போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோவும், மாடலும், தொழில்முனைவோருமான ரோட்ரிக்ஸும், 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் ஒரு தனிப்பட்ட திருமண விழாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தம்பதியினர் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்துச் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்களது திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தங்களது 5 குழந்தைகளை மட்டுமே வைத்து யாரையும் அழைக்காமல் சிம்பிளாக தங்களது திருமண விழாவினை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த நீண்ட நெடிய காதல்கதை தொடங்கியது எப்படி என்று பார்க்கலாம். ஜார்ஜினா மாட்ரிட்டில் உள்ள ஒரு குச்சி (gucci) கடையில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்தபோது, ​​ரொனால்டோவும் ஜார்ஜினாவும் சந்தித்தனர். அன்றைய பொழுது ஜார்ஜினா வேலைக்கு வரவேண்டிய தேவை இருக்கவில்லை. தனது நண்பரின் ஷிஃப்டை பார்ப்பதற்காக அவர் அன்று கடைக்கு வந்துள்ளார். அன்றுதான் அந்த காதல் அத்தியாயம் தொடங்கியது. சில பத்திரிகைகளின் படி அவர்களது காதல் பயணம் 2016-ம் ஆண்டு வாக்கில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சில ஆதாரங்கள் அவர்கள் 2017-ம் ஆண்டில் பழகத் தொடங்கியதாக கூறுகின்றன. அவர்கள் நீண்ட நாட்களாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் ரொனால்டோவும் ரோட்ரிக்ஸும் தங்கள் வாழ்க்கைப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டதால், அவர்களுடைய உறவு சமூக ஊடகங்களில் வெளிப்பட்டது. இதனிடையில் அவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன. ஏற்கனவே ரொனால்டோவிற்கு ஒரு மகன் உள்ளார். ஆனால், அவரது தாயின் பெயரையோ அல்லது அடையாளத்தையோ ஒருகாலமும் வெளிவிடமாட்டேன் என்று ரொனால்டோ ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Ronaldo and Georgina Wedding
Ronaldo and Georgina Wedding

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11, 2025 அன்று அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக சமூகவலைத்தளத்தில் அவர்கள் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்திருந்தனர். அதனைப்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது. இவ்வாறாக இவர்களது ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் தம்பதிகளின் சமூகவலைத்தள பக்கத்தின் வாயிலாகவே ரசிகர்கள் தெரிந்து வந்தார்கள். தற்போது தங்களின் 5 குழந்தைகளின் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இது குறித்து ஜார்ஜினா சிறுவயதில் இது குறித்து பெரிய கனவுகள் இருந்ததாகவும், ஆனால், தற்போது பிரபலமான பின்பு தனிமையான வாழ்வு எவ்வளவு முக்கியம் என்று புரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக நீண்டநாள் காதல்வாழ்க்கையில் இருந்த ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடி இப்போது திருமண ஜோடிகளாக மாறியுள்ளது ரசிகர்களிடையே மகிஷியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com