'தேவா தேவாதான்' - ரஜினி முதல் அஜித் வரை நடிகர்களை நட்சத்திரங்களாக மாற்றிய இசை.. தென்றலில் கரைந்த தேனிசை!

தேவா இசையமைத்த பல பாடல்கள் அவருடையது தான் எனத் தெரியாமலே ரசிப்பதுண்டு.
deva
Published on: 
Updated on: 
2 min read

தேவா என்ற பெயரை தேனிசைத் தென்றல் தேவா என ரசிகர்களால் இன்றளவும் கொண்டாட செய்த பெரிய ஜாம்பவான் இசையமைப்பாளர் தேவா ஆவர். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர் மட்டுமின்றி சிறந்த பாடகரும் ஆவார். 

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயணித்து, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா. குறிப்பாக, சென்னைத் தமிழின் தனித்துவமான இசை வடிவமான மெட்ராஸ் கானா பாடல்களைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இதனால் இவர் ‘கானா பாடல்களின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முக்கிய இடம்பிடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இந்தப் படங்களின் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையும் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல், அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தங்களது திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவிய ஆரம்பகால வெற்றிப் படங்களிலும் தேவாவின் இசை முக்கியப் பங்கு வகித்தது. அஜித்தின் ஆசை, காதல் கோட்டை, வாலி மற்றும் விஜய்யின் நேருக்கு நேர், பிரியமுடன், குஷி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து, தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்தார். பல தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ள தேவாவின் பாடல்களும் பின்னணி இசையும், தமிழ் திரையிசையில் அவரது தனித்துவமான பங்களிப்பை இன்றும் நினைவூட்டுகின்றன.

1989 ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் என இசையில் இருவரின் ஆதிக்கம் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்கு எனவே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். 

கானா பாடல்களை திரையுலகில் மையமாக கொண்டு ஒரு தனி ட்ரெண்டை செட் செய்தவர் தேவா. தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவே தெரிவிதிருந்தார். 2022-ஆம் ஆண்டு 'தேவா தேவாதான்' இசை நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டதை இன்றளவும் ரசிகர்கள் ட்ரெண்டிலையே வைத்துள்ளனர்.

கானா பாடல்களை திரையுலகில் மையநீரோட்டதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தேவா இசையமைத்த பல பாடல்கள் அவருடையது தான் எனத் தெரியாமலே ரசிப்பதுண்டு. சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்திலும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பேருந்தில் பாடல் போகும் பொது முதியவர் ஒருவர் 'ராஜா ராஜாதான்' எனக் குறிப்பிடுகையில் இளைஞர் ஒருவர் ‘ராஜா ராஜாதான் ஆனா இது தேவா பாட்டு' எனப் பதிலளிப்பார். இந்த வசனம் இன்று சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து இருக்கும். 

90களின் பிரபலமான நடிகர்களை எடுத்துக் கொண்டால் தேவா உடன் ஒரு ஹிட் பாடலாவது கொடுத்திருப்பார்கள். தேவாவின் காதல் பாடல், நாட்டுப்புற பாடல், மோட்டிவேஷன் பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலம். கானா பாடலை திரைப்படத்தில் கொண்டு வந்ததில் தேவாவின் பங்கு அலபாரியாதது. ஆனால் அது சாதாராண விஷயம் இல்லை. அந்த காலத்தில் அந்த பாடல்களை பிளாட்பார்ம் சாங் என்பார்கள். அது சென்னையில் நாட்டுப்புற பாடல். நான்தான் அதை கானா என மாற்றினேன். கானா என்றால் ஹிந்தியில் பாடல் என அர்த்தம். வட சென்னை மக்களும் கானா பாடல் கொண்டு வர முக்கியமானவர்களாக இருந்தார்கள். ராஜா சாருக்கும், ரஹ்மான் சாருக்கும் கானா பாடல் தெரியாது அதனால் நான் அதை கொண்டு வந்தேன் என்று சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று அவரின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, மொத்த இசை பிரியர்களுக்கும் பேரிடியாய் அவரின் இறப்பு செய்தி வந்தது. ஆமாம் இன்று காலையில் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவா, காலமாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 75 வயதாகும் அவரின் உயிர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரிந்திருக்கிறது. முதல்கட்ட தகவல்கள் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com