

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் மகளான அனந்திதா, நீண்ட நாள் தான் சந்தித்த கடுமையான இணையத் தாக்குதல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த இன்டெர்வியூ-வில் தன் உடல் எடை, தோற்ற மாற்றம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளித்ததோடு, தனது குழந்தை பருவத்தில் சந்தித்த இணையவழி வெறுப்பின் தாக்கம் குறித்தும் பேசியுள்ளார். தற்போது அந்த விடீயோக்கள் சமூக வலைதளத்தில் வெகுவாக பரவி, பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அனந்திதா, "பலருக்கு இது தெரிவதில்லை, நான் 2018 அல்லது 2019-ல் உடல் எடையைக் குறைக்க ஆரம்பித்தேன். ஆக, இந்த நிலையை அடைய எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. கோவிட் நேரத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆனால் எல்லோரும், அடக் கடவுளே, அனந்திதா இதைச் செய்திருக்கிறாள், அதைச் செய்திருக்கிறாள், அறுவை சிகிச்சை செய்திருக்கிறாள்' என்று சொல்கிறார்கள். எப்படி முடிவு செய்கிறீர்கள்?" என்று விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும் தனது 10, 15 வயதில் எண்ணில் அடங்க வெறுப்புகளை சந்தித்ததாகவும், அது ஒரு குழந்தை பருவம் அந்த குழந்தையின் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபலமான எடை குறைப்பு மருந்துகளைச் சுற்றியுள்ள யூகங்களுக்கு பதிலளித்த அனந்திதா,."இப்போது மக்கள் என்னைப் பார்க்கும்போது, 'ஓசெம்பிக், மௌஞ்சாரோ...' என்று சொல்கிறார்கள். அவர்கள் கதைகளைக் கட்டிவிடுவது சிரிப்பாக இருக்கிறது. இந்த வெறுப்பு ஒருபோதும் ஓயாது... அது ஒருபோதும் ஓயாது என்பது எனக்கு தெரியும். மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நான் என் உடல் எடையைக் குறைக்கவில்லை. ஆனால் அந்த வயதில், அந்த அளவுக்கதிகமான வெறுப்பைப் பெறும்போது, எனக்கு 15 வயதுதான், என் பெற்றோர் பிரபலங்கள்தான், ஆனால் நான் பிரபலம் அல்ல. நான் அசிங்கமாக இருக்கிறேன் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்றார் அனந்திதா.
“இந்த சமூகத்தை மகிழ்விக்க நான் திரைப்படங்களை கொடுக்கலாம், ஆனால் எனது உடலை மாற்றி இந்த சமூகத்தை திருப்திப்படுத்த முடியாது” என்றும் "அந்த எண்ணம் இன்னும் முடியவில்லை தற்போது அது வேறு வடிவத்தில் வந்துள்ளதாகவும்" வருத்தத்துடன் தெரிவித்தார். “திருநங்கைகள் அழகானவர்கள் சரிதானே? அவர்கள் சிறந்தவர்கள்; அவர்கள் மிகவும் நுணுக்கமானவர்கள் மற்றும் அழகானவர்கள் என்று நான் நினைக்கிறேன். மேலும், என் வாழ்வில் நான் சந்தித்தவர்களிலேயே மிகவும் இனிமையான, அன்பான பல திருநங்கைகளை எனக்குத் தெரியும். ஆனால் நான் இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கும்போது, நான் ஒரு திருநங்கையை போல் இருக்கிறேன் என்பது தான் மக்கள் என்னைப் பற்றிப் பயன்படுத்தும் வார்த்தை. இது எனக்கு மட்டுமல்ல . நீங்கள் ஓரினச்சேர்க்கை வெறுப்பாளராகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அறியாமையிலும் இருக்கிறீர்கள்” என்பதையும் கட்டுவதாக குறிப்பிட்டார். மேலும் “திருநங்கைகளுடன் ஒப்பிடப்படுவதை இழிவானதாக கருதக்கூடாது" என்றும் அத்தகைய கருத்துக்களில் பிரதிபலிக்கும் ஏற்றத்தாழ்வு குறித்தும் கவலை தெரிவித்தார்.
முதலில், திருநங்கையாக இருப்பதோ அல்லது ஒரு திருநங்கையைப் போல் தோற்றமளிப்பதோ ஒரு அவமானம் இல்லை, ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட இதைத்தான் நான் அதிகமாகப் பார்க்கிறேன். நான் ஒரு பெண். உங்களுக்குத் தெரியுமா, மற்ற எல்லாவற்றையும் விட, என்னால் முடிந்தவரை கருணையுடன் என் வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறேன். மற்றவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், இந்த மக்கள் கருணையற்றவர்கள் என்பதுதான். இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டால், பெரும்பாலான கருத்துகள் நான் எவ்வளவு அசிங்கமாக இருக்கிறேன் என்பதைப் பற்றியே இருக்கின்றன. நான் இதைப் பொறுத்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் நம் அன்றாட வாழ்வில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது, அதை கவனிக்காமல் அடுத்தவர் வாழ்க்கையில் குறை சொல்ல நமக்கு என்ன உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.