ஓரினச் சேர்க்கை கன்டென்ட்டுக்கு இங்கே இடமில்லை.. 'டோரத்தி' படத்துக்கு தடை விதிக்கிறதா மலேசியா?

மலேசியாவில் இந்த படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Karthik Subbaraj Dorothy
Karthik Subbaraj Dorothy
Published on
Updated on
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'டோரதி' திரைப்படம் மலேசியாவில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது, படத்தில் தன்பாலின ஈர்ப்பு உள்பட LGBTQ பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியதால் மலேசியாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'டோரதி' திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நண்பர்கள் வாழ்க்கையில் ஒரு பெண் வந்ததால் என்னவாகிறார்கள்?என்பதுதான் கதை.

இந்த திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், ரிஷி காந்த், சனத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது, உலகளவில் செப்டம்பர் 25 அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், மலேசியாவில் இந்த படத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது திரைப்படத்தில், ஓரினசேர்கையை ஆதரிக்கும் கருத்துக்கள் இருப்பதால் அந்நாட்டில் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

மலேசியா நாட்டில் ஓரின சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், LGBTQ+ என்ற வார்த்தைக்கு பதிலாக "நெறி பிறழ்ந்தவர்கள்" என்று குறிப்பிடுமாறு கூறுகிறார்கள். மேலும், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் கீழ், மலேசியா LGBTQ+ உரிமைகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அதோடு, மலேசியாவில் ஓரினச்சேர்க்கைத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் அதுபோன்ற உறவுகள் செல்லாதவையாகக் கருதப்படுகிறது.

மேலும், இது தண்டனைக்குரிய ஒரு குற்றமாக அந்நாட்டில் பார்க்கப்படுகிறது. இந்த காரணத்தால், 'டோரத்தி' திரைப்படம் அந்நாட்டில் தடை செய்யப்படுவதாகவும், உலகளவில் செப்டம்பர் 25 அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் நாளை மலேசியாவில் வெளியாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com